ஐயோ… 20 வருஷம் சிறை… கடைசியில தேநீர் கடையிலயா?… நிதாரி வழக்கு சுரேந்தர் கோலியின் விபரீத முடிவு… அதிர்ச்சி பின்னணி…!

Spread the love

நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில் உள்ள தனது தேனீர் கடையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சுரேந்தர் கோலி, நொய்டாவின் நிதாரி கிராமத்தில் தொழிலதிபர் மோனிந்தர் சிங் பாந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்பவராகப் பணியாற்றி வந்தார். 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த வீட்டின் அருகிலுள்ள சாக்கடையிலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. சிபிஐ விசாரணையில் கோலி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவருக்குக் கீழமை நீதிமன்றங்களால் மரண தண்டனை வரை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இருப்பினும், போதிய மற்றும் நம்பகமான ஆதாரங்கள் இல்லாததால் அலகாபாத் உயர் நீதிமன்றம் 2023-இல் பல வழக்குகளில் இவரை விடுவித்தது. தொடர்ந்து, உச்ச நீதிமன்றமும் 2025-இல் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளிலிருந்தும் இவரை விடுவித்து உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. சுமார் இரண்டு தசாப்தங்களாகச் சிறையில் கழித்த பிறகு விடுதலை செய்யப்பட்ட கோலி, ஹரித்வாரில் தேனீர் கடை நடத்தி வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.

Swetha

Recent Posts

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

3 minutes ago

டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி….. 200 கடைகளுக்கு பூட்டு போடப்போகும் விஜய் அரசு… அலறும் அதிகாரிகள்…. சற்றுமுன் பறந்த உத்தரவு…!

தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

13 minutes ago

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

23 minutes ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

33 minutes ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

39 minutes ago

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

43 minutes ago