புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி கருவடிக்குப்பம் கோமாதா கோயில் அருகே வசித்து வந்தவர் ஆனந்த் என்ற முண்டகண்ணு ஆனந்த் (32). இவர் மீது ஏற்கனவே கொலை, அடிதடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் ECR சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
ஆனந்தை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பல், திடீரென அவரைச் சுற்றிவளைத்து கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த முக்கிய சாலையில் நடந்த இந்த எதிர்பாராத கொடூரத் தாக்குதலால் நிலைகுலைந்த ஆனந்த், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்த் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்ததைக் கண்டதும், தாக்குதல் நடத்திய கொலைக் கும்பல் அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றது.
இக்கொலை குறித்து தகவலறிந்த எஸ்பி வம்சீத ரெட்டி மற்றும் லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் இருந்த முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனந்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளிகளைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளையும், சம்பவ நேரத்தில் அப்பகுதியில் சென்ற வாகனங்களின் விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனந்த் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக, கடந்த ஆண்டு நவீனா கார்டன் பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட மோதல்கள் காரணமா என்ற கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கொலையாளிகள் தப்பிச் சென்ற வழி மற்றும் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த ' பெஜெயின்டில் ' என்ற சமூக வலைதளப் படைப்பாளி , இரவில் பெண்களின் பாதுகாப்பைச் சோதித்துப் பார்க்க…
நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…
ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் நுழைவு வாயில் அருகே, பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அங்கிருந்த…
ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…
காசியாபாத் ராஜ்நகர் KW ஸ்ருஷ்டி குடியிருப்பில் செப்டம்பர் 15 அன்று அதிகாலை 5 மணியளவில், கிழிந்த ஆடைகளுடன் அழுதுகொண்டே சுற்றித்…