கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரை, குடும்பங்களும் காதல் ஜோடிகளும் பொழுதைக் கழிக்கும் அழகிய இடமாகத் திகழ்கிறது. எனினும், இரவில் அங்கு நடக்கும் சில அத்துமீறல்களைத் தடுக்கச் சிறப்புப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த மின் கேபிள்களை ஒயர் கட்டரால் நறுக்கிக் கொண்டிருப்பதைப் பாதுகாவலர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
முதலில் தப்பி ஓடிய அந்த இளைஞர், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அதே இருட்டான பகுதிக்கு வந்து மறைந்து நின்றபோது பாதுகாவலர்களிடம் கையும் களவுமாகச் சிக்கினார். ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், கைது செய்யப்பட்டவர் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரசாத் என்பது தெரியவந்தது.
விசாரணையில், இரவில் அங்கு வரும் ஜோடிகளை யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து வேவு பார்ப்பதே தனது வழக்கம் என்றும், தான் பார்ப்பது பிறருக்குத் தெரியாமல் இருக்கவும் அப்பகுதியை முழு இருட்டாக்கவும் மின் கேபிள்களை வெட்டியதாகவும் பிரசாத் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த பைக், ஐபோன் மற்றும் ஒயர் கட்டர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…
சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…