அன்பில் மகேஷ் போட்ட இரகசிய போன் கால்… வெளியே வந்து KN நேரு கொடுத்த பதிலடி…. தமிழக அரசியலில் திடீர் பரப்பரப்பு….!

Spread the love

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய அரசு ஆவணங்கள், நிதி பதிவுகள், கணினிகள் மற்றும் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது 177-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் அங்கீகாரம் மற்றும் தர உயர்வுக்காக பெரும் தொகை வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அன்பில் மகேஷின் இல்லம் மற்றும் அவரது உதவியாளரின் இல்லம் உட்பட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதோடு, இதுவரையில் 250-க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஷின் இல்லத்திற்கு வருகை தந்த திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவை, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.என். நேரு, மக்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றி வரும் திமுக தலைவர்களை இலக்கு வைத்து, அவர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடனேயே இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாகக் காட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், சோதனைகள் முடிவடைந்ததும் அன்பில் மகேஷ் அனைவரையும் நேரில் சந்திப்பார் என்று தெரிவித்த கே.என். நேரு, அரசியல் ரீதியாக ஏவப்படும் இத்தகைய நடவடிக்கைகளை கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்றார். நீதிமன்றத்தின் மூலம் தங்கள் தரப்பு நியாயத்தையும், எவ்வித குற்றமும் செய்யவில்லை என்பதையும் உறுதியாக நிரூபித்து வெளிவருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

“எங்க அம்மாவையே திட்டுவியா?”…. சமயபுரத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி….!

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே, பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் உடைந்த மதுபாட்டிலால்…

3 seconds ago

குடித்துவிட்டு வந்து சொந்த மகளையே சிதைத்த தந்தை…. கர்ப்பிணி சிறுமியை பார்த்து தாய் அதிர்ச்சி…. வழக்கின் இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…..!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், தனது 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த…

8 minutes ago

“கழுத்தறுத்து கொல்லப்பட்ட மனைவி”… ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட செல்போன்…. சிசிடிவியில் சிக்கிய கடைசி நபர்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (நிலக்கோட்டை சர்வேயர்). இவருக்கும் காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்…

15 minutes ago

“6 இடங்களில் ஒரே நேரத்தில் நடந்த ஆபரேஷன்”… அலறித் துடிக்கும் எதிர்க்கட்சிகள்… அடுத்தடுத்து தூக்கப்படும் விஐபிக்கள்: தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு….!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறிவரும் வழக்குப்பதிவுகளும் சோதனைகளும் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே திமுக முக்கியப் பிரமுகர்கள்…

23 minutes ago

இன்று இரவு 9:45 மணிக்கு கரண்ட் கட்?…. உங்க போனுக்கு இந்த மெசேஜ் வந்தா மக்களே உஷார்…. தமிழ்நாட்டில் தீயாய் பரவும் புதுவகை சைபர் மோசடி…. எச்சரிக்கை….!

"மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என போலி குறுஞ்செய்தி அனுப்பி, மின்சார வாரியத்தின் பெயரில் பொதுமக்கள் பணத்தைச் சூறையாடும் புதிய வகை…

33 minutes ago

“ஜெயலலிதா சொன்ன லேடியா? மோடியா? மறந்துபோச்சா?”…. அப்போ ரோஷம் வரலையா…. மரகதம் குமரவேலை வெளுத்து வாங்கிய புளூ சட்டை மாறன்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளது.…

43 minutes ago