சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை புதுப்பேட்டையில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இவருக்கும், உடன் பணிபுரியும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் காவலர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருக்கமாகப் பழகி, கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.
காதல் தீவிரமடைந்த நிலையில், அந்த ஆண் காவலர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண் காவலருடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். தன் காதலனையே கணவனாக அடையப்போகிறோம் என்ற நம்பிக்கையில் பெண் காவலரும் அவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். இதனிடையே இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோர்களுக்கும் தெரியவர, அவர்களும் இவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண் காவலர் திடீரென கர்ப்பமானார். ஆனால், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதைச் சாக்காக வைத்து, அந்த ஆண் காவலர் அவரை வற்புறுத்தி ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தைக் கலைத்துள்ளார். கருவைக் கலைத்த சில நாட்களிலேயே, மனமாற்றம் அடைந்த அந்த ஆண் காவலர், பெண் காவலரைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டு அவருடனான தொடர்பைத் துண்டித்துள்ளார்.
பின்னர், பணிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்குச் சென்ற அந்த ஆண் காவலர், அங்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவலர், ஏமாற்றப்பட்ட தனக்கு நீதி வேண்டும் என்றும், வாழ்க்கையைச் சீரழித்த காவலர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…