“ஐயோ நீதி எங்கே?… காவல் நிலையத்திற்குள்ளேயே விஷம்… குடித்த 22 வயது இளம்பெண்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்… மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பு…!”

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் நிலையத்திற்குள், 22 வயதான பிங்கி நாயக் என்ற பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் குடும்பத்தினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல்கள் குறித்து புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்ததாலேயே அவர் இந்த தீவிர முடிவை எடுத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னணியில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் மீது எதிர்த்தரப்பினர் தாக்குதல் நடத்தியது தொடர்பாகவும், அவர்களுக்கு இடையேயான தொடர் மோதல்கள் குறித்தும் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் விசாரணையைத் தாமதப்படுத்தியதாகவும், எதிர்த்தரப்பினரின் மிரட்டல்கள் அதிகரித்த நிலையில் நீதி கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே அப்பெண் காவல் நிலைய வளாகத்திலேயே விஷம் அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இக்காட்சிகள் காவல் நிலைய சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளன.

விஷம் அருந்திய அப்பெண் உடனடியாக மீட்கப்பட்டு சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் எஸ்பி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, காவல் நிலைய சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்.

Swetha

Recent Posts

உங்க கிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… அரசு மிக முக்கிய அறிவிப்பு…!

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…

4 minutes ago

“அட கொடுமையே… அனாதைன்னு நம்பி பொண்ணு கொடுத்த குடும்பம்… கணவரின் போனை பார்த்த… மனைவிக்கும் காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான போலி பின்னணி…!”

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துப்ரான் மண்டலத்தைச் சேர்ந்த மன்னே (60) என்பவரின் மனைவி சுஜாதா, தன் கணவரின் செல்போனில்…

11 minutes ago

ஐயோ பாவம்… தெருவில் நடந்த சிறுமி மீது சாய்ந்த மின்கம்பம்… நொடியில் பறிபோன உயிர்… உ.பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டம் பஹ்வான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகினி சுக்லா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு…

25 minutes ago

ஷாக்… உதயநிதி நாளை சட்டசபை வரக்கூடாது?… CM விஜய் மேஜைக்கு வந்த… ரகசிய உளவுத்துறை ரிப்போர்ட்… பின்னணி என்ன?…

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்த்துப்…

9 மணத்தியாலங்கள் ago

அடேங்கப்பா…. அன்று கோவையில் பிரியாணி… இன்று டோக்கியோவில் மிச்செலின்… ஒரே ஒரு தட்டு பிரியாணி செய்த ‘மாஸ்’ சம்பவம்…!

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான தகமாசா ஒசாவா என்பவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சுவைத்த பிரியாணி அவரது…

9 மணத்தியாலங்கள் ago

போயிட்டு வரேன்… கிருத்திகாவுக்கு சைகை… இன்பநிதியை கட்டி அணைத்த உதயநிதி… நீலாங்கரை வீட்டில் நடந்த உருக்கமான நிமிடங்கள்…!

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்துப்பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் ‘திரிஷா’ எனக் கூச்சலிட்டனர்.…

9 மணத்தியாலங்கள் ago