உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் சமீப காலமாகவே திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்தில் அனுபவிக்கும் சித்திரவதைகளால் பெண்கள் பலரும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துவிட்டது. அப்படி ஒரு துயர சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சௌமியா காஷ்யப் என்ற அந்தப் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், போலீஸ்கான்ஸ்டபில் ஆன தன்னுடைய கணவர் அனுராக் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார். என் கணவர் அனுராக்சிங் மீண்டும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது மைத்துனர் சஞ்சய் காவல்துறையில் பணியாற்றுகிறார். மற்றொருவர் ரஞ்சித் வழக்கறிஞராக இருக்கிறார். அவர்கள் என்னை தொடர்ந்து சித்திரவதை செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிட்டனர். இன்று நான் உயிரிழந்தால் அதற்கு பொறுப்பாளிகள் அவர்கள்தான். இவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தால் எதையும் செய்யக் கூடியவர்கள் என்று அந்த பெண் அழுதபடி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று நான் உயிரையும் மாய்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூக்கு கயிருக்கு முன்பே நின்று கொண்டு அந்தப் பெண் வெளியேற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்தப் பெண் உயிரிழந்து விட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…