சீனாவில் கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகளால் ஆண்களுக்கு நிகரான பெண்கள் விகிதம் குறைந்துள்ளதால், திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் திண்டாடி வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்கு பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை 2 கோடி அதிகமாக உள்ளது. இதனால் எப்படியாவது திருமணம் செய்ய நினைக்கும் சீன இளைஞர்கள், வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்ய ஆர்வம் காட்டி, புரோக்கர்கள் மூலம் ஆயிரக்கணக்கான யுவான்களைச் செலவு செய்கிறார்கள்.
இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சில வெளிநாட்டுப் பெண்கள், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சீன இளைஞர்களிடம் பெருந்தொகையைச் சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இத்தகைய தொடர் ஏமாற்றுச் சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த சீனா, தன் நாட்டு இளைஞர்களுக்குப் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சோஷியல் மீடியாக்கள் மற்றும் சட்டவிரோத ஏஜென்சிகள் மூலமாக மணப்பெண்களைத் தேடி ஏமாற வேண்டாம் என்றும், அழகு மற்றும் ஆசை வார்த்தைகளில் மயங்கி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் சீனா அறிவுறுத்தியுள்ளது.
மேலும், முறையான சட்டப்பூர்வ அங்கீகாரம் இன்றி வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்ய முயல்பவர்கள் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சீனா எச்சரித்துள்ளது. வங்கதேச சட்டப்படி ஆள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்தை வியாபாரமாக்கிப் பெண்களை விலைக்கு வாங்க முயலாமல், பரஸ்பர சம்மதத்துடன் உண்மையான ஈர்ப்பின் அடிப்படையில் மட்டுமே சர்வதேச திருமணங்கள் அமைய வேண்டும் என சீன தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…