திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். தனக்கும் திஷா சாலியனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும், அவரைத் தான் இதுவரை பார்த்ததோ அல்லது சந்தித்ததோ இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித ஆதாரமும் இன்றி தனது பெயர் இதில் இழுக்கப்படுவதாகவும், இது அரசியல் நோக்கத்திற்காகத் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க நடத்தப்படும் திட்டமிட்ட பிரச்சாரம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
திஷா சாலியனின் தந்தை சதீஷ் சாலியன், தனது மகளின் மரணம் தொடர்பாகச் சிபிஐ-யிடம் அளித்த அறிக்கையில் ஆதித்யா தாக்கரே, பாலிவுட் நடிகர்கள் மற்றும் சில காவல்துறை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து மறுவிசாரணையைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், எஃப்.ஐ.ஆரில் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் குற்றவாளியாகக் கருதக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டு ஜூன் 8 அன்று திஷா சாலியன் உயிரிழந்த நிலையில், முந்தைய விசாரணைகளில் இதில் எவ்வித சதியும் இல்லை என்றே முடிவுக்கு வரப்பட்டது. தொலைக்காட்சி விவாதங்களும் ஊடக விசாரணைகளும் உண்மையை மாற்றிவிட முடியாது என்று தெரிவித்துள்ள ஆதித்யா தாக்கரே, அரசியல் உள்நோக்கம் கொண்ட திசைதிருப்பல்கள் இல்லாமல் அதிகாரப்பூர்வ விசாரணை இயல்பாக நடக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இத்தகைய அரசியல் பழிவாங்கல்கள் தன்னை உண்மைக்காகப் போராடுவதிலிருந்து த தடுக்க முடியாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…