“IAS, IPS அதிகாரிகள் திடீர் பந்தாட்டம்…” யாரை நம்புறதுன்னே தெரியல…கடந்த ஆட்சியில் பவர்ஃபுல்லாக இருந்த அதிகாரிகளுக்கு செக் வைத்த புதிய அரசு… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தங்களின் நிர்வாகப் பாதையில் யாரை நம்புவது என்ற குழப்பத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து இடமாற்றம் செய்து பந்தாடி வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய திறமையான அதிகாரிகள், தற்போதைய புதிய ஆட்சியில் தங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்களோ என்ற தேவையற்ற அச்சமும், சந்தேகமுமே இந்தத் தொடர் மாற்றங்களுக்குப் பின்னணியாக அமைந்துள்ளது. எந்தவொரு புதிய அரசும் ஆரம்பக் கட்டத்தில் இத்தகைய தடுமாற்றங்களைச் சந்திப்பது இயல்புதான் என்றாலும், ஒரு குழந்தை அரசு போல அவசரப்பட்டு “எடுத்தோம் கவிழ்த்தோம்” என்ற பாணியில் செயல்படுவது நிர்வாகச் சீர்குலைவிற்கே வழிவகுக்கும்.

நேர்மையான மற்றும் திறமையான உயர் அதிகாரிகள் எந்த ஆட்சி அமைந்தாலும், அரசின் திட்டங்களை செம்மையாக மக்களிடம் கொண்டு சேர்த்து, துறையின் வளர்ச்சிக்காக மட்டுமே உழைக்கக்கூடியவர்கள். இவர்களின் நிர்வாக அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், தங்களுக்கு விசுவாசமாக இருப்பார்களா என்ற ஒற்றை நோக்கில் மட்டும் அதிகாரிகளைப் பந்தாடுவது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்துவிடும். அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், அனுபவமிக்க அதிகாரிகளை ஓரம் கட்டுவது புதிய அரசுக்கு இன்னும் கூடுதல் சவால்களையே உருவாக்கும்.

தற்போது அமைந்துள்ள புதிய அரசுக்கு மக்கள் மத்தியில் நற்பெயரைச் சம்பாதிக்க இன்னும் போதிய கால அவகாசம் உள்ளது. எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும், அச்சத்தையும் கடந்து, திறமையான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதை விடுத்து, தொடர்ந்து அதிகாரிகளைப் பந்தாடிக்கொண்டே இருந்தால், நிலையான மற்றும் சீரானதொரு நிர்வாகத்தைத் தருவதில் தொய்வு ஏற்பட்டு, அதன் நேரடிப் பாதிப்பை இறுதியில் மக்களே சந்திக்க நேரிடும் என்பதைப் புதிய அரசு உணர வேண்டும்.

Visaka

Recent Posts

ஐயோ… நண்பனின் மனைவியுடன் தொடர்பா?… தட்டிக் கேட்ட கணவர்… தடுக்க வந்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… தருமபுரியில் திடுக்கிடும் பின்னணி…!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…

8 seconds ago

ஷாக்… 100 கோடி லஞ்சம் கொடுத்த பள்ளிகளை ஏன் விசாரிக்கல?… ஊழல் வழக்கில் பாய்ந்த அன்பில் மகேஷின் அதிரடி கேள்வி… இணையத்தில் பெரும் வைரல்…!!

தனியார் பள்ளிகளுக்கு 20 ஆண்டு கால நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட…

7 minutes ago

அவர் கிறிஸ்தவர்… டைரியை எரித்த அம்மா… வீட்டில் கிளம்பிய எதிர்ப்பு குறித்து… ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் வைரல்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஆண்டனி தட்டிலுடனான தனது 15 ஆண்டு கால காதல் மற்றும் திருமணம் குறித்து சுவாரஸ்யமான…

17 minutes ago

சாதி ஓட்டு எனக்கு தீட்டுன்னு சொன்னாரே தம்பி?… அம்பாசமுத்திரத்தில் சாதி கணக்கு போட்டு களமிறங்கும் சீமான்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவிலிருந்து விலகிய இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர்…

35 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… சீட் இல்லனு CNG சிலிண்டர் மீது… அமர வைக்கப்பட்ட பள்ளி குழந்தைகள்… இணையத்தை அதிரவைத்த அதிர்ச்சி வீடியோ… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் 'தி சயின்ஸ் ஸ்கூல்' என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள்…

50 minutes ago