கொல்கத்தாவில் 47 வயது பெண் ஒருவர் தனது 22 வயது மகனுடன் இணைந்து, தொழிலதிபர் ஒருவரை திட்டமிட்டு ஏமாற்றிய அதிர்ச்சி தரும் “ஹனி ட்ராப்” (Honey Trap) சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்த மாலதி சர்க்கார் என்ற அந்தப் பெண், தனது வயதைக் கடந்த இளமைத் தோற்றத்தை மூலதனமாக வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். குடும்பமே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலச் செயல்பட்டு, வசதியான ஆண்களைக் குறிவைத்து வலையரித்த விதம் போலீசாரையே திகைக்க வைத்துள்ளது.
இந்த மோசடிக்கு மாலதியின் மகன் அர்ஜுன் மூளையாகச் செயல்பட்டுள்ளார். தனது ஜிம் நண்பரான ராகேஷ் மேத்தா மூலமாக, விக்ரம் ராய் என்ற பெரும் செல்வந்தரைத் தனது தாய்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். 47 வயதானாலும் இளமையாகத் தோற்றமளித்த மாலதியின் வசீகரப் பேச்சில் மயங்கிய விக்ரம் ராய், அவரைத் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். இதனைச் சாதகமாக்கிக் கொண்ட மாலதி, “உன்னையே என் வாழ்க்கையாகக் கருதுகிறேன்” என ஆசை வார்த்தைகளைக் கூறி, விக்ரமை தனது மாயவலையில் முழுமையாக விழச் செய்துள்ளார்.
தனது மகனின் படிப்புச் செலவு மற்றும் குடும்பச் சூழலைக் காரணம் காட்டி, சிறுகச் சிறுக விக்ரமிடம் இருந்து மாலதி லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்துள்ளார். இருப்பினும், மாலதியின் அடங்காத பண ஆசையாலும், அவரது நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களாலும் சந்தேகமடைந்த விக்ரம் ராய், ரகசியமாக விசாரணையில் இறங்கினார். அப்போதுதான், தான் காதலிப்பதாக நினைத்த பெண், தனது மகன் மற்றும் நண்பனுடன் சேர்ந்து தன்னைத் திட்டமிட்டுச் சிக்க வைத்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். சுமார் 35 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர, தங்க நகைகளை அந்த கும்பல் அவரிடமிருந்து அபகரித்துள்ளது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட வியாபாரியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த கொல்கத்தா போலீசார், மாலதி, அவரது மகன் அர்ஜுன் மற்றும் நண்பர் ராகேஷ் ஆகிய மூவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். “காதல் என்பது இவர்களுக்கு ஒரு வருமானம் தரும் தொழிலாகவே இருந்துள்ளது” என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் மற்றும் பொது இடங்களில் வசதியானவர்களைக் குறிவைத்து, தாய் – மகனே இணைந்து நடத்திய இந்த நூதன மோசடி கொல்கத்தா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…
ஒடிசா மாநிலத்தில் மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால், 73 வயது முதியவர் ஒருவர் உடைந்த காலோடு 150 கிலோமீட்டர் தூரம்…
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள காண்ட்லபல்லி மாதிரி அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவி…
வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…
பெங்களூரு அருகே தாபஸ்பேட்டையில் உள்ள 'பிரேம் சிவா ஜுவல்லரி' நகைக் கடைக்குள் புகுந்த 5 முதல் 6 பேர் கொண்ட…