அறிவாலயத்தில் நடந்த ‘சீக்ரெட்’ மீட்டிங்… காங்கிரஸின் 65 தொகுதிகள் பட்டியல், எகிறும் எதிர்பார்ப்பு…!!!

Spread the love

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில், கிரிஸ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் ஐவர் குழுவினர் பங்கேற்றனர்.

மேலும் கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை தனது செல்வாக்கை நிலைநாட்ட 41 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களை எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. இதற்காக 65 தொகுதிகள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் தரப்பு வழங்கியுள்ள நிலையில், கூட்டணியின் ஒற்றுமையே பிரதானம் என இரு தரப்பு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், திமுக தலைமை தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், காங்கிரஸிற்கு 25 முதல் 28 இடங்கள் வரை மட்டுமே வழங்க திமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறிப்பாக, ஒரு ராஜ்யசபா இடத்தை உறுதி செய்துள்ள திமுக, சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதில் தயக்கம் காட்டி வருகிறது. ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸின் கௌரவம் குறையாத வகையில் பேச்சுவார்த்தை நடத்த சோடங்கர் குழு முயன்றாலும், தற்போதைய சூழலில் இழுபறி நீடித்து வருகிறது. அடுத்தடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajeshwari

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

6 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

6 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

6 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

6 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

7 மணத்தியாலங்கள் ago