7 வயது சிறுவனின் தாயுடன் காதல்…! “திருமணமான 13 நாட்களிலே பிரிந்து…” ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, திருமணம் ஆகி வெறும் 13 நாட்களே ஆன நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மதுபோதையில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலனூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பானுப்பிரியா (29), கணவரை இழந்த நிலையில், ஏழு வயது மகனுடன் வசித்து வந்தார். இவர், திண்டுக்கல் பாளையத்தைச் சேர்ந்த கௌதம் (31) என்பவரைக் காதலித்து வந்தார். கௌதம் மூலனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

காதலித்து வந்த இருவரும் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நாள் முதல் கௌதம், பானுப்பிரியா அடிக்கடி செல்போனில் பேசுவதைக் கண்டித்து, எண்ணை மாற்றச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும், மதுப்பழக்கம் இருந்த கௌதம் தினந்தோறும் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று மது அருந்திவிட்டு பானுப்பிரியாவின் வீட்டிற்கு வந்த கௌதம், இனி சண்டையிட மாட்டேன் என்று கூறி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், பானுப்பிரியா, காதலின்போது கொடுத்த வாக்குறுதிக்குப் புறம்பாக, கௌதம் மது அருந்துவதையும், தன்னைச் சந்தேகப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, அவர் திருந்தினால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட கடுமையான தகராறின்போது, ஆத்திரமடைந்த கௌதம், தன்னிடம் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடலில் தீப்பற்றியது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரைக் காப்பாற்றித் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கௌதம் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago