சந்தோஷ் சுப்பிரமணியம் ஸ்டைலில் ஒரு நேர்த்திக்கடன்!” – மாமியார், நாத்தனாருடன் முட்டிக்கொள்ளும் பெண்கள்..பின்னணியில் இருக்கும் நெகிழ்ச்சி காரணம்…!

Spread the love

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகாவில் உள்ள சிக்கீரண்ணாமாலிகே என்ற கிராமத்தில், மாமியார் மற்றும் நாத்தனார்களின் தலையில் மருமகள்கள் முட்டிக்கொள்ளும் வினோதமான திருவிழா அரங்கேறியுள்ளது. பொதுவாக மாமியார்-மருமகள் உறவு என்றாலே சச்சரவுகளும், மனக்கசப்புகளும் நிறைந்திருக்கும் என்ற பிம்பம் நிலவி வரும் சூழலில், இந்த வினோத சடங்கு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அங்குள்ள அகோபலா நரசிம்மசாமி கோவிலின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு இந்தச் சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை நினைவுபடுத்தும் வகையில், தேரோட்டத்தின் போது மருமகள்கள் தங்கள் மாமியார்கள் மற்றும் நாத்தனார்களின் தலையில் முட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குடும்பத்திற்குள் இருக்கும் கசப்புகளை மறந்து ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே இந்த வினோத நேர்த்திக்கடனின் அடிப்படை நோக்கம் ஆகும்.

மருமகள்கள் தங்கள் மாமியாரைத் தாயாகவும், நாத்தனாரைச் சகோதரியாகவும் கருதுவதையும், அதேபோல் மாமியார்-நாத்தனார்கள் மருமகளைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக ஏற்றுக்கொள்வதையும் இந்தத் திருவிழா வலியுறுத்துகிறது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் தேர் மீது வாழைப்பழம், வெல்லம் மற்றும் நாணயங்களை வீசி எறியும் வேளையில், இந்த முட்டிக்கொள்ளும் சடங்கு உற்சாகமாக நடைபெறுகிறது. இந்த வினோத வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

குடும்பங்கள் செழிக்கவும், அனைவரும் ஆரோக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழவும் இந்தச் சடங்கு செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். கசப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு அன்பால் பிணைக்கப்படும் இத்தகைய திருவிழாக்கள் நம்மூரிலும் நடந்தால் குடும்ப உறவுகள் மேம்படும் எனப் பல நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தத் திருவிழா தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Muthu Mani

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

6 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

6 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

6 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

6 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

6 மணத்தியாலங்கள் ago