சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி… இரண்டரை வயதில் குழந்தை… ஓடும் ரயிலில் தவறி விழுந்து காப்பாற்ற யாரும் வராததால் உயிரிழந்த இளம் பெண்…!

Spread the love

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பால் பண்ணை நடத்திவரும் நிலையில் இவருக்கு ரோகிணி (30) என்ற மனைவியுள்ளார். ரோகினி சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. ராஜேஷ் தந்தை சென்னையில் உள்ள நிலையில் அவரைப் பார்க்க தனது மனைவியை அழைத்துக் கொண்டு குழந்தையை உறவினர்களிடம் விட்டுவிட்டு திருவனந்தபுரத்திலிருந்து கோவை மற்றும் சேலம் வழியாக சென்னை செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருவரும் சென்னைக்கு பயணம் செய்தனர்.

நேற்று காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றதும் சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டு உள்ளது. அப்போது ரோகினி கழிவறைக்கு சென்ற நிலையில் கழிவறைக்கு வெளியே உள்ள வாஷ்பேஷனில் முகத்தை கழுவிக் கொண்டு இருந்த அவர் வெகு நேரம் ஆகியும் இருக்கைக்கு திரும்பவில்லை. நீண்ட நேரம் ஆகியும் மனைவி வராததால் ராஜேஷ் அவரை தேடிய நிலையில் ரயில் காட்பாடியை நெருங்கியதும் சந்தேகமடைந்த ராஜேஷ் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் ரோகினியை தேடிய நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

பிறகு போலீசார் அங்கு சென்ற பிணமாக கிடந்த பெண் அணிந்திருந்த உடை மற்றும் அடையாளங்களை வைத்து விசாரித்த போது அந்தப் பெண் ரோகினி என்பதும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது. ஆனால் தவறி விழுந்த தண்டவாளத்திலிருந்து எதிர் திசையில் ரயில்கள் வரக்கூடிய தண்டவாளத்தில் ரோகிணி இறந்து கிடந்தார். அந்தப் பகுதியில் விசாரித்த போது ரயிலில் இருந்து விழுந்த ஒரு பெண் உயிருக்கு போராடிய நிலையில் எழுந்து மறுபகுதிக்கு சிரமப்பட்டு நடந்து வந்ததாகவும் பிறகு முடியாமல் அங்கேயே விழுந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது ரயிலில் இருந்து தவறி விழுந்த ரோகிணி உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்குச் சென்று விடலாம் என்று நடந்து சென்றதும் காப்பாற்ற யாருமே வராததால் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

Nanthini

Recent Posts

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

17 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

28 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

33 minutes ago

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

42 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

44 minutes ago

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

53 minutes ago