“17 ஆண்டு காலத் திருமணம்… 1 லட்ச ரூபாய் கூலிப்படை”… கணவனின் பணத்திலேயே அரங்கேறிய கொடூரம்…. சடலத்துக்கு உடையை மாற்றி செய்த அசிங்கம்….!

Spread the love

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் ஹேமா தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிய நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வேலை நிமித்தமாக அவர் அங்கேயே தங்கியிருந்த சூழலில், ஹேமாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த பண்டாரு கங்காதர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ள உறவாக மாறியுள்ளது. இதுகுறித்து அறிந்த அப்பலநாயுடு மனைவியைக் கண்டித்ததோடு, தனது வேலையையும் விட்டுவிட்டு சொந்த ஊருக்கே திரும்பி வீட்டிலிருந்தபடியே கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினார். இதனால் கணவர் மீது ஆத்திரமடைந்த ஹேமா, தனது காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்.

திட்டத்தின்படி சம்பவத்தன்று இரவு அப்பலநாயுடுவின் உணவில் ஹேமா தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றதை உறுதி செய்த பின், காதலன் கங்காதர் ஏற்பாடு செய்த கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் அப்பலநாயுடுவின் கழுத்தை நெரித்தும், இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியும் கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பின் எவ்வித சலனமும் இன்றி வீட்டிலிருந்த ரத்தக்கறைகளை சுத்தம் செய்த ஹேமா, கணவரின் ஆடைகளை மாற்றிவிட்டு மறுநாள் காலை அக்கம் பக்கத்தினருடன் இயல்பாகப் பேசி காபி குடித்து நாடகமாடியுள்ளார்.

அடுத்த நாள் காலை அப்பலநாயுடுவின் அண்ணன் மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடலின் மேல் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, போலீசார் மனைவி ஹேமாவிடம் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதலன் கங்காதருடன் இணைந்து கூலிப்படை மூலம் கணவரைக் கொலை செய்ததை ஹேமா ஒப்புக்கொண்டார். மேலும், கணவரைக் கொலை செய்ய அப்பலநாயுடுவின் பணத்திலிருந்தே ஒரு லட்சம் ரூபாயை எடுத்து ஹேமா கூலிப்படைக்குக் கொடுத்த அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் வெளிவந்தது. இதையடுத்து ஹேமா மற்றும் அவரது காதலன் கங்காதரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இக்கொலையில் நேரடியாகத் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

10 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

18 minutes ago

திடீர் திருப்பம்… அமித் ஷாவுக்கு துணைப் பிரதமர் பதவி?… அதிரப் போகும் டெல்லி…. யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்..!

மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை…

22 minutes ago

சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக…

33 minutes ago

“இது தொல்லை தாங்க முடியல.. அழுத குழந்தையை சுவற்றில் வீசிய காதலன்”… அடுத்த நொடியே தாய் செய்த கொடூர செயல்… இறுதிச் சடங்கில் அம்பலமான பகீர் உண்மை.!

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு,…

39 minutes ago

“உல்லாசமாக இருக்கலாம் வா…” இளம்பெண் வீசிய ஆசை வலை… ஓட்டு வீட்டுக்குள் நுழைந்த பைனான்சியருக்கு காத்திருந்த பகீர் அதிர்ச்சி…!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து…

47 minutes ago