இனி தப்பி தவறையும் வீட்டில் குப்பைத்தொட்டியை இந்த இடத்தில் வச்சிடாதீங்க… பலரும் அறியாத வாஸ்து…!

Spread the love

வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் வாஸ்து சாஸ்திரம் என்பது உண்டு. சரியான முறையில் திசையை அமைக்காவிட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் மற்றும் கஷ்டங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள அனைத்து கழிவுகளையும் குப்பைத் தொட்டியில் தான் போடுவார்கள். குப்பை கூடை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் எங்கு வைக்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. வீட்டில் எங்கு வேண்டுமானாலும் குப்பைத் தொட்டியை வைக்கக் கூடாது.

வீட்டில் உள்ள வடகிழக்கு அதாவது வாஸ்து சாஸ்திரத்தின் படி ஈசானி மூலையில் நேர்மறை ஆற்றல் நிறைய இருக்கும். ஆகவே அங்கு குப்பைத் தொட்டியை வைத்தால் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் வருவதை தடுக்கும். அதனால் குப்பைத் தொட்டியை அந்த இடத்தில் வைக்க கூடாது. வீட்டின் மையப் பகுதியை பிரம்மஸ்தானம் என்று கூறுவார்கள். ஆகவே குப்பைத் தொட்டியை வாஸ்துபடி அங்கு வைப்பது தவறு. நுழைவு வாயில், ஜன்னல், கதவுகள் இது போன்ற இடத்தில் குப்பைத் தொட்டியை வைத்தால் எதிர்மறை ஆற்றல் சுலபமாக வீட்டுக்குள் வந்துவிடும். ஆகவே அங்கு வைக்க கூடாது.

வடமேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைக்கலாம். வடமேற்கு திசையை வாய்வு மூலை என்று அழைப்பார்கள். தென்கிழக்கு திசையை அக்னி மூலை என்று அழைப்பார்கள். இந்த இடங்களில் சமநிலை பாதிக்காமல் இருக்கும் ஆகவே குப்பைத்  தொட்டிகளை வைக்கலாம். குப்பைத் தொட்டியை வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் அல்லது மூடப்பட்ட முற்றத்தில் வைத்தால் நல்லது. வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரவவிடாது.

முடிந்த வரை சமையலறையில் குப்பைத் தொட்டியை வைக்கக்கூடாது. ஒருவேளை வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் மூடிப்  போட்டு குப்பைத் தொட்டியை பயன்படுத்தலாம். கட்டாயம் குப்பைத்  தொட்டியை மூடி தான் வைக்க வேண்டும் இல்லையெனில் லட்சுமி தேவி வீட்டுக்குள் வரமாட்டார். வீட்டில் ஆரோக்கிய சூழல் உருவாக தினமும் குப்பை தொட்டியை சுத்தம் செய்துவிடுங்கள். மேலே உள்ள பதிவில் இருப்பது போல் குப்பைத் தொட்டியை வீட்டில் வைத்து உபயோகியுங்கள்.

Divyamayakannan

Recent Posts

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

7 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

11 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

17 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

25 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

27 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

27 minutes ago