வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் வாஸ்து சாஸ்திரம் என்பது உண்டு. சரியான முறையில் திசையை அமைக்காவிட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் மற்றும் கஷ்டங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ள அனைத்து கழிவுகளையும் குப்பைத் தொட்டியில் தான் போடுவார்கள். குப்பை கூடை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும் எங்கு வைக்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. வீட்டில் எங்கு வேண்டுமானாலும் குப்பைத் தொட்டியை வைக்கக் கூடாது.
வீட்டில் உள்ள வடகிழக்கு அதாவது வாஸ்து சாஸ்திரத்தின் படி ஈசானி மூலையில் நேர்மறை ஆற்றல் நிறைய இருக்கும். ஆகவே அங்கு குப்பைத் தொட்டியை வைத்தால் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் வருவதை தடுக்கும். அதனால் குப்பைத் தொட்டியை அந்த இடத்தில் வைக்க கூடாது. வீட்டின் மையப் பகுதியை பிரம்மஸ்தானம் என்று கூறுவார்கள். ஆகவே குப்பைத் தொட்டியை வாஸ்துபடி அங்கு வைப்பது தவறு. நுழைவு வாயில், ஜன்னல், கதவுகள் இது போன்ற இடத்தில் குப்பைத் தொட்டியை வைத்தால் எதிர்மறை ஆற்றல் சுலபமாக வீட்டுக்குள் வந்துவிடும். ஆகவே அங்கு வைக்க கூடாது.
வடமேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைக்கலாம். வடமேற்கு திசையை வாய்வு மூலை என்று அழைப்பார்கள். தென்கிழக்கு திசையை அக்னி மூலை என்று அழைப்பார்கள். இந்த இடங்களில் சமநிலை பாதிக்காமல் இருக்கும் ஆகவே குப்பைத் தொட்டிகளை வைக்கலாம். குப்பைத் தொட்டியை வீட்டிற்கு வெளியே திறந்த வெளியில் அல்லது மூடப்பட்ட முற்றத்தில் வைத்தால் நல்லது. வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரவவிடாது.
முடிந்த வரை சமையலறையில் குப்பைத் தொட்டியை வைக்கக்கூடாது. ஒருவேளை வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் மூடிப் போட்டு குப்பைத் தொட்டியை பயன்படுத்தலாம். கட்டாயம் குப்பைத் தொட்டியை மூடி தான் வைக்க வேண்டும் இல்லையெனில் லட்சுமி தேவி வீட்டுக்குள் வரமாட்டார். வீட்டில் ஆரோக்கிய சூழல் உருவாக தினமும் குப்பை தொட்டியை சுத்தம் செய்துவிடுங்கள். மேலே உள்ள பதிவில் இருப்பது போல் குப்பைத் தொட்டியை வீட்டில் வைத்து உபயோகியுங்கள்.
