தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருப்பது, அக்கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை மநீம எதிர்பார்த்த நிலையில், உதயசூரியன் சின்னத்தில் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு உடன்படாத கமல்ஹாசன், திடீரென “நிபந்தனையற்ற ஆதரவு” அளிப்பதாக அறிவித்துத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டார். இது ஒருபுறம் இருக்க, விருப்பமனு தாக்கல் செய்த நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட கட்டணத் தொகை குறித்து அவர் மௌனம் காப்பதுதான் தற்போதைய முக்கியப் புகாராக வெடித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட விரும்பி சுமார் 60-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 30 லட்சம் ரூபாய் வரை விருப்பமனு கட்டணமாகச் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது. டார்ச்லைட் சின்னத்தில் களம் காணலாம் என நம்பிக்கையுடன் காத்திருந்த அவர்களுக்கு, கட்சியின் இந்தத் திடீர் பின்வாங்கல் பேரிடியாக அமைந்துள்ளது. குறிப்பாக, கோவை தெற்கு போன்ற வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடப் பணம் செலுத்தியவர்கள், தற்போது தேர்தலில் போட்டியிடாத சூழலில் தாங்கள் செலுத்திய பணத்தை மீண்டும் ஒப்படைப்பதுதானே நியாயம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆழ்வார்பேட்டை வட்டாரத்தில் இது குறித்துப் பேச்சுக்கள் எழுந்தாலும், பணத்தைத் திருப்பிக் கொடுப்பது குறித்துக் கட்சித் தலைமை இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. “மாற்றம்” என்ற முழக்கத்துடன் அரசியலுக்கு வந்தவர், தேர்தல் களத்தையே சந்திக்காமல் இருப்பது கட்சி நடத்தி என்ன பயன் என நிர்வாகிகள் குமுறுகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆதரவை நெகிழ்ந்து பாராட்டினாலும், சொந்தக் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை இழக்கும் வகையில் கமல்ஹாசன் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…