பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகாத சூழலில், தஞ்சை மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் முரளிதரன் தன்னிச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை தனது ராசிக்கு உகந்த நாள் என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தாலும், கட்சியின் ஒழுங்குமுறையை மீறி தன்னிச்சையாகச் செயல்பட்டது சர்ச்சையை உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, முரளிதரனை பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை கட்சிக்குள் நிலவும் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…