தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… புதிய ரேஷன் கார்டு எப்போ கிடைக்கும்…?அமைச்சர் வெளியிட்ட மாஸ் அப்டேட்…!

Spread the love

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி, தற்போது மீண்டும் தொடங்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் இப்பணி தள்ளிப்போனது. இதனால் புதிய கார்டுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துக் காத்திருந்த பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவி வந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன், புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குப் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கும் பணி முறைப்படி தொடங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது 2 கோடியே 28 லட்சத்து 41,335 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதன் மூலம் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை மானிய விலையில் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். மேலும், மக்களுக்கான சேவைகளைச் செய்யும்போது, அதைப் பொறுக்க முடியாதவர்கள் வழக்கறிஞர் நியமனத்தில் பணம் வாங்கியதாக வீண் அவதூறு கூறுகின்றனர் என்றும் அமைச்சர் இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Swetha

Recent Posts

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

4 minutes ago

“ஏமாத்துரத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?…” 2 கிலோ தங்கம்… 10 அடுக்குமாடி குடியிருப்பு… சந்தை மதிப்பு ரூ.150 கோடியா?… ஆனா சாதாரண எஞ்சினியர்… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை…!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…

5 minutes ago

இது என்னடா புதுசா இருக்கு… “180% அதிக மழை…” இமயமலையைக் தாண்டி… 10,000 கி.மீ மேகப்படை… ஆசிய கண்டத்தையே சூழும் பேராபத்து?… மிரள வைக்கும் சாட்டிலைட் போட்டோ…!

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…

16 minutes ago

ரயில்வே எக்ஸாம்க்கு படிக்கிறீங்களா…? 1.61 லட்சம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்… மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடுகளோ நிகழவில்லை என்றும், சுமார் 1.61…

17 minutes ago

உயிர்காக்கும் மருந்தா? இல்ல விஷமா?… “C.B.I வலையில் சிக்கிய ‘மதுரை’ ராஜா… புதுச்சேரியை உலுக்கிய போலி மருந்து மாஃபியா… ரூ.2 கோடி லஞ்சம்… பதறும் உயரதிகாரிகள்…!

புதுச்சேரியில் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வரும் போலி மருந்து தயாரிப்பு கும்பல்களின் அத்துமீறல்கள், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.…

24 minutes ago

செக் மோசடி வழக்கு….! நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி…. அதிர்ச்சியில் திரையுலகம்…!!

'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஃபைனான்சியர் கோபி என்பவரிடம் நடிகர் விமல் ரூ.4.5 கோடி கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பிச்…

26 minutes ago