என்ன தம்பி இதெல்லாம்?…. திமுகவில் உதயநிதிக்கு எதிராக திரும்பிய மூத்த நிர்வாகிகள்…. சைலண்டாக வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்…. அலறும் அறிவாலயம்….!

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அவர் தெரிவித்த சில கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டு அவர் பேசிய பேச்சு, திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தனர்.

இந்த அரசியல் மோதலின் தொடர்ச்சியாக, திமுகவின் முக்கியப் பிரதிநிதிகள் மீது காவல்துறை சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் தூத்துக்குடியில் தவெக அரசை விமர்த்துப் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முதலமைச்சருக்கு எதிராகப் பேசிய பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம், திமுக முகாமில் கூடுதல் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், சொந்தக் கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்படும் சூழலிலும், திமுக தலைமையிலிருந்து வலுவான களப் போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்ற அதிருப்தி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இந்தச் சம்பவங்களுக்கு வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிடுவதாகவும், நேரடியாகக் களத்தில் இறங்கி ஆதரவு அளிக்கவில்லை என்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் புலம்பி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த கஸ்டடி மரண விவகாரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்த சிறுமி கொடூரக் கொலை சம்பவம் போன்ற மக்கள் சார்ந்த பிரச்சனைகளிலும் திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாகக் கட்சியின் முதன்மை முகமாக முன்னிறுத்தப்படும் உதயநிதி ஸ்டாலின், இதுபோன்று களப் போராட்டங்களில் தீவிரம் காட்டாதது குறித்து மூத்த தலைவர்கள் அவருக்குத் தொடர்ந்து அரசியல் நகர்வுகள் மற்றும் வியூகங்கள் குறித்து விளக்கமளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

3 minutes ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

8 minutes ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

15 minutes ago

“ஏமாத்துரத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?…” 2 கிலோ தங்கம்… 10 அடுக்குமாடி குடியிருப்பு… சந்தை மதிப்பு ரூ.150 கோடியா?… ஆனா சாதாரண எஞ்சினியர்… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை…!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…

16 minutes ago

இது என்னடா புதுசா இருக்கு… “180% அதிக மழை…” இமயமலையைக் தாண்டி… 10,000 கி.மீ மேகப்படை… ஆசிய கண்டத்தையே சூழும் பேராபத்து?… மிரள வைக்கும் சாட்டிலைட் போட்டோ…!

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…

26 minutes ago

ரயில்வே எக்ஸாம்க்கு படிக்கிறீங்களா…? 1.61 லட்சம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்… மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடுகளோ நிகழவில்லை என்றும், சுமார் 1.61…

27 minutes ago