தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு அதிகமாகப் பெருமளவில் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள், பினாமிகளுடன் தொடர்புடைய 7 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரூ.1.23 கோடி மதிப்பிலான 4 குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள், ரூ.1.82 கோடி மதிப்பிலான வணிகக் கட்டிடம் மற்றும் ரூ.2.90 கோடி மதிப்பிலான மற்றொரு வணிகக் கட்டிடம் எனப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அசையாச் சொத்துகள் மட்டுமன்றி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், ரூ.52.02 லட்சம் வங்கி வைப்புத் தொகை, ரூ.4 கோடி மதிப்புள்ள 2.094 கிலோ தங்க ஆபரணங்கள், ரூ.45 லட்சம் மதிப்பிலான 3 வாகனங்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 20 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரமணா தனது மனைவியின் பெயரில் 4 கட்டுமான நிறுவனங்களை நடத்தி, அஞ்சநேய நகர் மற்றும் மூசாபேட் பகுதிகளில் ரூ.20 கோடி முதலீட்டில் 10 குடியிருப்பு வளாகங்களைக் கட்டி வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி கணக்கிடப்பட்ட சொத்துகளின் மதிப்பைக் காட்டிலும், தற்போதைய சந்தை நிலவரப்படி இதன் உண்மையான மதிப்பு சுமார் ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை இருக்கும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டிலும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் மீது, தற்போது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அதிகாரியின் இந்த அசாத்திய சொத்துக் குவிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…
மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…
மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…