#image_title
பிரபல நடிகரான சிம்பு கடந்த 2002- ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படத்தை டி ராஜேந்தர் இயக்கினார். அதன் பிறகு அலை, கோவில், மன்மதன், சரவணா, வல்லவன், சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, போடா போடி, செக்கச் சிவந்த வானம், மாநாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிம்பு நடித்துள்ளார்.
இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவும் நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். கமலுக்கு இணையாக சிம்புவின் கதாபாத்திரத்திற்கு தக் லைஃப் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறதாம். இந்த படத்திற்காக சிம்புவின் கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலம் கழித்து தக் லைப் படத்தில் கமல்ஹாசனின் மணிரத்தினமும் இணைந்து வேலை பார்க்கின்றனர். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது வரை 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது. சென்னை, ராஜஸ்தான், டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக் லைஃப் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்து விட்டது. சிம்பு ஹீரோவாக திரை வாழ்க்கையில் தனது பயணத்தை தொடங்கி 22 ஆண்டுகள் ஆகிறது.
ஆனால் ஷூட்டிங்கிற்கு தொடர்ந்து வரமாட்டார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தது. இந்த நிலையில் மணியரத்தினத்தின் தக் லைஃப் படத்திற்கு சொன்னபடி ஒரு நாள் கூட தவறாமல் சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விடுகிறாராம். இன்னும் சிம்பு 8 நாட்கள் தான் படத்தில் நடிக்க வேண்டி இருக்கிறதாம். இதுவரை இல்லாமல் கமல் மற்றும் மணிரத்தினம் மீது உள்ள மரியாதை காரணமாக சிம்பு ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஷூட்டிங்கிற்கு சொன்னபடி வந்து விடுவதால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…