#image_title
எந்த ஒரு தொழில் ஆரம்பித்தாலும் அதற்கு தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி கட்டாயம் இருந்தால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும். அது மட்டும் இல்லாமல் ஒரு தொழிலை நடத்தும் போது ஏற்படும் சவால்களையும் கஷ்டங்களையும் தாங்கினால் மட்டுமே அடுத்த படிக்கு செல்ல முடியும். அப்படி ரூபாய் 5000 கடன் வாங்கி ஆரம்பிக்கப்பட்ட ஜோதி லேப்ஸ் உஜாலா நிறுவனம் இன்று 20000 கோடி டேர்ன் ஓவர் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் வரலாறு என்ன என்பதை இனி காண்போம்.
ஜோதி லேப்ஸ் உஜாலா நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் ஆவார். அவர் போஸ்ட் கிராஜுவேஷன் படிக்கும்போதே எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார் ராமச்சந்திரன். மக்களுக்கு பயன்படக்கூடிய பொருட்களை ஏதாவது நாம் மார்க்கெட்டில் விற்க வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருந்தார் ராமகிருஷ்ணன். ஆடைகளை வெள்ளையாக்கும் வைட்னரை தயாரிக்கலாம் என்று முடிவு செய்தார் ராமச்சந்திரன்.
முதலில் வைட்னர்கள் தயாரிப்பதற்கு அவர் வீட்டு சமையலறையில் கொதிக்க வைத்தல் கரைத்தல் மற்றும் பல்வேறு விதமான சோதனைகளை செய்தார் ராமச்சந்திரன். ஆனால் அவரது முயற்சிகள் எல்லாம் வீணாகித்தான் போனது. அதன் பிறகு அவர் யோசிக்கும்போது ஊதா நிற சாயத்தை பயன்படுத்துவது வெள்ளை ஆடைகளை சிறந்த முறையில் வெண்மையாக்கும் என்பதை ஒரு புத்தகத்தில் படித்த ராமச்சந்திரன் அந்த ஊதா நிற சாயத்தை உருவாக்குவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் செலவழித்தார்.
எப்பொழுதுமே ரிஸ்க் எடுப்பதற்கு தயங்காத மனிதர் தைரியமானவர் ராமச்சந்திரன். ஒருவழியாக ஊதா நிற சாயத்தை உருவாக்கிய ராமச்சந்திரன் தனது சகோதரரிடம் 5000 ரூபாய் கடன் வாங்கி 1983 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் தொழிற்சாலையை அமைத்தார். அந்த தொழிற்சாலைக்கு தனது மகளின் பெயரை சூட்டி ஜோதி லேபரட்டரி என்று பெயரிட்டார். இந்த தொழிற்சாலைகளில் துணிகளை வெண்மையாக்கவும் பளிச்சிடப்படும் உஜாலா சுப்ரீம் லிக்விட் ஃபேப்ரிக் உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தார் ராமச்சந்திரன்.
ஆரம்பத்தில் வீடுவீடாக தனது ப்ராடக்ட்களை எடுத்து சென்று விற்று வந்தார் ராமசந்திரன் கூடிய விரைவில் இந்த உஜாலா நீலம் பிரபலம் அடைந்து இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் சென்றடைந்தது. 1997 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் உஜாலா நீலம் பிரபலமானது உஜலாவிற்கு நேஷனல் மார்க்கெட்டும் உருவானது
விளம்பரங்கள் மட்டும்தான் எல்லார் வீட்டிற்கும் தனது பொருட்களை கொண்டுசெல்லும் என்பதை ஆழமாக நம்பிய ராமச்சந்திரன் விளம்பரங்களுக்கு அதிக செலவு செய்து தனது ப்ராடக்டுகளை விதவிதமாக விளம்பரப்படுத்தி அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தினார் ராமச்சந்திரன்.
இவரது உஜாலா சுப்ரீம் நீலத்தை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் வெள்ளை ஆடைகளை வெண்மை படுத்த பயன்படுத்துவர். 1983இல் கேரளாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட உஜாலா தொல் நிறுவனம் 1992 இல் உஜாலா தொழிற்சாலையாக துவங்கப்பட்டது. 1997 இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 2000 இல் மேக்ஸ் ஓ மற்றும் எக்ஸ் ஓ அறிமுகம் செய்யப்பட்டது. 2002இல் ஸ்ரீ சாய் ஹோம்கர் என் நிறுவனத்தை வாங்கியது ஜோதி லபரட்டீஸ். 2007 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் இந்த நிறுவனம் நுழைந்தது. 2008 இல் மும்பை அந்தேரி பகுதியில் புதிய அலுவலகத்திற்கு உஜாலா ஹவுஸ் மாற்றப்பட்டது. பின்னர் ஃபேப்ரிக் இன்ஹான்ஸர்ஸ், மஸ்கிட்டோ ரெப்லெண்ட்ஸ், டிடர்ஜென்ட் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்தது.
பின்னர் 2009 ஆம் ஆண்டு ஃபேப்ரிக்ஸ் சேவைக்காக ஜோதி ஃபேப்ரிக் கேர் சர்வீஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 2010ல் இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டார். 2011 ஆம் ஆண்டு ஹெங்கோ நிறுவனத்தையும் ஜோதி லேப்ஸ் கைப்பற்றியது. 2017ல் புதிய மார்க்கோ சோப்புகளை அறிமுகப்படுத்தியது. 2019 ஆம் ஆண்டில் பிரில் ஐ அறிமுகப்படுத்தியது. 2020இல் மார்கோ ஃபேஸ்வாசை அறிமுகப்படுத்தியது. ஜோதி லேப்ஸ் நிறுவனம் இப்படி படிப்படியாக பல பொருட்களை அறிமுகம் செய்து பிரம்மாண்டமாக விரிவடைந்துள்ளது.
தற்போது ஜோதி லேப்ஸ் Ujala, Maxo, T Shine, Pril, Mr White, ஆகிய விற்பனை செய்து வருகிறது. தற்போதைய பிராண்ட் அம்பாசிடராக டாப்ஸி, காஜல் அகர்வால், ராக்ஷி கண்ணா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் உள்ளனர். ஒரு தனி மனிதனால் 5000 ரூபாய் கடன் வாங்கி உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று 20 ஆயிரம் ரூபாய் டேர்ன் ஓவர் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. பல வருடங்கள் தனி மனிதனாக கடின உழைப்பால் ஒரு பிராண்டை உருவாக்கிய ராமச்சந்திரன் தற்போது ஓய்வு பெற்று தனது மகளான எம் ஆர் ஜோதிக்கு பொறுப்பை கொடுத்து விட்டார். தற்போது ஜோதி லேப்ஸ் நிறுவனத்தை எம் ஆர் ஜோதி நடத்தி வருகிறார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…