#image_title
இந்த ஆண்டு வருகிற மாதங்களில் தரமான சிறப்பான திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவர காத்திருக்கிறது. அப்படி இனிவரும் நாட்களில் புதிதாக வெளியாகும் படங்களின் பட்டியல் மற்றும் அதனுடைய ரிலீஸ் தேதி என்னவென்று இனி பார்ப்போம்.
1. வாழை
மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்திருக்கும் இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி, ஜானகி போன்றோர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீசாகிறது.
2. கொட்டுக்காளி
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் கீழ் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி சூரி, அன்னா பென் நடித்திருக்கும் திரைப்படம் கொட்க்காளி. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகிறது.
3. கோட்
வெங்கட் பிரபு இயக்கி ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.
4. மெய்யழகன்
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சி பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்தசாமி, ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
5. கங்குவா
கே ஈ ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கி சூர்யா, திஷா பட்டாணி, பாபி டியோல் நடித்திருக்கும் திரைப்படம் கங்குவா. இத் திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது.
6. வேட்டையன்
டிஜே ஞானவேல் எழுதி இயக்கி லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் ஆகியோர் நடித்த திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படமும் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது.
7. அமரன்
கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோர் நடித்த திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 31ம் தேதி வெளியாகிறது.
8. Brother
சித்தார்த் ரவி பாட்டில், செந்தில்குமார் தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், நடராஜன் அய்யர் நடிக்கும் திரைப்படம் பிரதர். இத்திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது.
9. விடாமுயற்சி
திருமேனி எழுதி இயக்கிய சுபாஷ்கரன் அல் ராஜா தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்த திரைப்படம் விடா முயற்சி. இத்திரைப்படம் வருகிற தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது.
இது தவிர அருண் விஜய் நடித்த வணங்கான், விக்னேஷ் சிவன் இயக்கிய பிரதிப் ரங்கநாதன் நடித்திருக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, கமலஹாசனின் தக் லைஃப், ஹிப் ஹாப் தமிழா ஆதி தயாரித்து இயக்கி நடித்துள்ள கடைசி உலகப் போர், சீயான் விக்ரமின் வீரதீரசூரன், சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை பாகம் 2, அனிகா நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், நிவின் பாலி நடித்த ஏழு கடல் ஏழுமலை ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த படங்கள் அனைத்தும் இந்த வருடத்திற்குள் ரிலீஸ் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…