#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தனது 69-ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமாக அரசியல் ஈடுபட போவதாக விஜய் அறிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கி உறுப்பினர் சேர்க்கை, முக்கிய பிரமுகர்கள் நியமனம், மாநாடு என அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஜயின் 69-ஆவது படத்தை ஹச்.வினோத் இயக்குகிறார். கடைசியாக கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அதற்கு படத்தின் நீளமும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அந்த வகையில் கோட் படத்தின் டிரைலரை வைத்துப் பார்க்கும்போதே அது இன்டர்நேஷனல் ஆக்சன் படமாக இருக்கும் என தெரிகிறது.
சென்சார் பட குழுவினர் கோட் திரைப்படத்திற்கு சான்றிதழ் கொடுத்துள்ளனர். கோட் திரைப்படம் 2.55 நிமிடம் ஓடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் ஓடாததற்கு படத்தின் நீளம் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில் கோட் படமும் அதிக நேரம் ஓடுவதால் ரசிகர்களின் வரவேற்பை பெறாதோ என பேசப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு போர் அடிக்காத வகையில் வெங்கட் பிரபு விறுவிறுப்பாக படத்தை உருவாக்கியுள்ளார். படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதனால் இந்தியன் 2 படத்திற்கு வந்த சிக்கல் கோட் திரைப்படத்திற்கு வராது என கூறப்படுகிறது. அதிலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் திரைக்குப் பின்னால் நடந்த சுவாரசியமான சம்பவங்களை வீடியோவாக எடுத்து வெங்கட் பிரபு இணைத்துள்ளார். படம் முடிந்த பிறகு சுமார் 3.30 நிமிடம் அந்த வீடியோ ஒளிபரப்பப்படுகிறதாம். விஜய்யும் படக்குழுவினரும் எப்படி எல்லாம் இருந்தார்கள் என்பதை ஒரு சில சின்ன கிளிப்ஸ் வீடியோவாக நாம் பார்க்க போகிறோம். இதனால் படம் ரிலீசாகும் தேதியை எதிர்கொண்டு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…