இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம் எந்தளவுக்கு வளர்ந்துள்ளதோ, அதே அளவிற்கு கலாச்சாரச் சீரழிவுகளும் இளைய தலைமுறையினரை ஆட்கொண்டு வருகின்றன. வெறும் 9 அல்லது 10 வயதே மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், பொதுவெளியில் எவ்வித அச்சமுமின்றி சிகரெட் பிடித்துக் கொண்டு சுற்றித் திரியும் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் கையில் வைத்திருப்பது சாதாரண சிகரெட் அல்ல; அது ‘இ-சிகரெட்’ (E-cigarette) அல்லது ‘வேப்’ (Vape) என்று அழைக்கப்படும் நவீன வகை புகையிலை சாதனம். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் கைகளிலும் இது போன்ற சாதனம் காணப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அந்தச் சிறுவன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வழிப்போக்கர் ஒருவர், அதனைத் தனது அலைபேசியில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். ஆனால், அதைக் கண்டு பயப்படாத அந்தச் சிறுவன், போதை தலைக்கேறிய நிலையில் கேமராவைப் பார்த்து அநாகரீகமான செய்கைகளைச் செய்யத் தொடங்கினான். எதைக் கண்டும் அஞ்சாத அவனது இந்த நடத்தை, இன்றைய சிறுவர்கள் தவறான வழிகாட்டுதல்களால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. எதிர்காலத் தூண்களாக இருக்க வேண்டிய சிறுவர்கள், இவ்வளவு இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதள மோகமும், தவறான முன்னுதாரணங்களும் சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் நஞ்சைப் பாய்ச்சி வருகின்றன. ஒரு சிறுவன் இவ்வளவு எளிதாக இ-சிகரெட் போன்ற போதைப் பொருட்களைப் பெறுவது எப்படி? அவனது பெற்றோரின் கண்காணிப்பு எங்கே போனது? போன்ற கேள்விகள் எழுகின்றன. ஒரு நொடி விளம்பரத்திற்காகவும், ஸ்டைலுக்காகவும் தொடங்கும் இந்தப் பழக்கம், ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே அழித்துவிடும். நம்மைச் சுற்றி வளரும் அடுத்த தலைமுறையினரை இத்தகைய நரகப் பாதையில் இருந்து மீட்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என…
தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்…
தமிழக பட்ஜெட்டில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு 'அண்ணன் சீர்' எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின்…
தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மாநிலத்தின்…
அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுத் துறை கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குத் தலா ரூ,8,000 வழங்கும் புதிய திட்டமானது இன்றைய…
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.…