கொஞ்சமாவது அறிவு இருக்கா..? 10-ம் வகுப்பு படிக்கிற பொண்ண இப்படியா நடத்துவீங்க.. கொந்தளித்த விஜே அர்ச்சனா..!

By Mahalakshmi on ஏப்ரல் 29, 2024

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூரை சேர்ந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான 10-ம் வகுப்பு முடிவுகளில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். அவரது சாதனையை பலரும் புகழ்ந்து பேசி வந்தாலும், அவரது உருவத்தை பார்த்து பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜே அர்ச்சனா பேசியிருக்கிறார்.

   

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் அர்ச்சனா தெரிவித்திருந்ததாவது “என்னுடைய கடந்த இன்ஸ்டா ஸ்டோரியை அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதை பார்க்கும்போது உண்மையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. 10-ம் வகுப்பு படித்து முடித்த ஒரு மாணவி இனிமேதான் அடுத்த ஒரு கட்டத்திற்கு செல்ல இருக்கிறார். 12-ம் வகுப்பில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும். அதைத் தொடர்ந்து இந்த உலகை பார்க்கப் போகிறார். கல்லூரிக்கு செல்ல போகிறார்.

   

 

ஆனால் அதையெல்லாம் சிறிது கூட யோசிக்காமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலரும் வாய்க்கு வந்தது எல்லாம் பேசி வருகிறார்கள். சரியானவற்றை பேசியதாக வேண்டும். சரியானவற்றை பேச வேண்டும் என்பதற்கு அடிப்படை விதிகள் இருக்கின்றது என்றால் மக்களுக்கு அநீதி நடக்கும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் உரிமையும் இருக்க வேண்டும் எங்கு நாம் அநியாயம் நடக்கின்றதோ? அதனை பெரிதாக பயன்படுத்துவது கிடையாது.

ஒரு சிறிய பெண் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்திருக்கின்றார். அது நம் கண்ணுக்கு தெரிவதில்லை. அவருடைய முகத்தோற்றம் மட்டுமே நம் கண்ணுக்கு தெரிகின்றது. சைபர் புல்லிங் என்பது மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. இதற்கு ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சைபர் கிரைம் போலீசார் இடம் சென்று புகார் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது.

ஒரு நாளைக்கு 1000 புகார்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு செல்கின்றது. அதற்கு நாம் சரியான சட்ட அமைப்பை கொண்டு வர வேண்டும். நான் உண்மையில் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள். நான் இதை நினைத்து மிகவும் அசிங்கப்படுகிறேன்” என்று பேசியிருந்தார்.