Categories: சினிமா

நடிகர் விஜய்க்கு கிடைக்கலே… அவர் அப்பாவுக்கு கிடைச்சது – கொல்கத்தாவில் விருது பெற்ற இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்!

Spread the love

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகருக்கு கொல்கத்தாவில் நடந்த விழாவில் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. கூரன் என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதை அவர் பெற்றுள்ளார். இதுகுறித்து இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாவது, நான் சினிமாவில் 45 ஆண்டுகளாக தயாரிப்பாளர், இயக்குனராக உள்ளேன். இப்போது நடிகராகவும் இருக்கிறேன். சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்றைப் போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் நடித்த படங்களில் கூரன் என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது ஒரு நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள பாசம் சம்பந்தப்பட்ட கதை. கூரன் படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது. பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பில் பார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு இந்த விருதை வழங்கினார்கள். நான் என் மனைவியோடு வந்து மகிழ்ச்சியோடு அந்த விழாவில் கலந்துகொண்டு விருதை பெற்றுக் கொண்டேன். சினிமாவில் நம்பிக்கையோடு அர்ப்பணிப்போடு உழைப்பை வழங்கினால் அது பெருமையான அங்கீகாரத்தை தேடித் தரும் என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார். நடிகர் விஜய் 68 படங்களில் நடித்தும் இதுபோன்ற சிறந்த நடிகர் விருதுகளை அவர் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

BREAKING: 7 முதல் 16 வயது சிறுமிகளுடன்… சொகுசு பங்களாவில் நடந்த கொடூரம்…. போக்சோ வழக்கில் அதிர்ச்சி திருப்பம்….!

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

7 minutes ago

“கடல் பார்த்த ஆபீஸ் யோகமா?”…. ரூ.1,200 கோடி திட்டத்திற்குப் பின் இருக்கும் ஜோதிடக் காரணம்…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்….!

பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு, உள்ளூர் மீனவ மக்களின்…

17 minutes ago

பீகாரை அலறவிட்ட சம்பவம்… சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… என்கவுண்டரில் தூக்கிய அதிரடி போலீஸ்….!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமி மற்றும் சிறுவன் தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் காவல்துறை…

26 minutes ago

அடேய் என்னடா பண்றீங்க…. ஒரே பைக்கில் 4 பேர்… தோள் மீது உட்கார்ந்து நடுரோட்டில் ஆபத்தான சாகசம்….. நெஞ்சை பதறவைக்கும் காட்சி…..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எலிஸ்பிரிட்ஜ் காவல் நிலையம் அருகே, ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் ஆபத்தான முறையில்…

34 minutes ago

வீட்டின் வெளியே நின்ற 91 வயது பாட்டி.. நொடியில் உயிரைப் பறித்த குரங்கு…. நெஞ்சை நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…..!

கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டத்தில் குரங்கு தாக்கியதில் 91 வயது மூதாட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் நஜ்முன்னிசா…

38 minutes ago

“ஏ அள்ளு அள்ளு… ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது”…. நெடுஞ்சாலையில் பாய்ந்த பால் ஆறு…. ஓடோடி வந்து குடங்களில் அள்ளிய மக்கள்…. வைரலாகும் வீடியோ…!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தவா அருகே மும்பை - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில், குஜராத்தில் இருந்து விரார் நோக்கிச்…

47 minutes ago