ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத் தொடர்ந்து, தற்போது குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த மற்றொரு சரக்குக் கப்பலை (Epaminondas) ஈரான் இராணுவம் சிறைபிடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தத்தைக் காலவரையறையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா தொடர்ந்து நீட்டித்து வருவதே இத்தகைய தாக்குதல்களுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் இந்தியா பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், ஈரானியத் தூதரை நேரில் வரவழைத்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச கடல் வழித்தடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்தியக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் அதிகரித்து வரும் இத்தகைய பதற்றங்கள், உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…