#image_title
தமிழ் திரையுலகில் தனது ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் தற்பொழுது வரை ஹிட் ஆகியுள்ளது. இறுதியாக வெளியான லியோ திரைப்படம் கூட தாறுமாறான வெற்றியை பெற்றது. தற்பொழுது அவர் நடித்து வரும் GOAT திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளதும் நாம் அறிந்ததே.
நடிகர் விஜய் திரைப்பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு திரைப்படங்கள் அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அப்பொழுது தான் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்தார் விஜய். இந்த திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பூவே உனக்காக படத்திற்கு பின் தான் விஜய்க்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்து முன்னணி ஹீரோவாக மாறினார்.
ஆனால், பூவே உனக்காக படத்திற்கு பின்னர் விஜய், விக்ரமனுடன் இணைந்து படம் பண்ணவில்லை. எனினும் 2002ல் வெளியான ‘உன்னை நினைத்து ‘ படத்தில் முதலில் சூர்யாவுக்கு பதில் முதலில் விஜய் தான் நடித்தாராம். இந்த படத்தில் லைலா, சினேகா என்று இரண்டு ஹீரோயின்கள் நடிக்க சூர்யாவின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இந்நிலையில் ‘ விஜய் ஏன் இந்த படத்தில் இருந்து விலகினார்..?’ என்பது குறித்து இயக்குனர் விக்ரமன் பேசிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறும்பொழுது, ‘ விஜய்க்கு இந்த படத்தின் கிளைமாக்ஸில் உடன் பாடு இல்லை. அதனால் கிளைமாக்ஸை மாற்ற சொன்னார். ஆனால், என் படங்களில் நான் என்ன நினைக்கிறேனோ அத தான் எடுப்பேன். உங்களுக்காக படத்தின் கதையை மாற்ற முடியாது’ என்று கறாராக கூறிவிட்டாராம். இதனால் தான் விஜய் விலக, சூர்யா இத்திரைப்படத்தில் நடித்தாராம் . இதோ அந்த வீடியோ…
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…