நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக திகழும் சிவாஜி கணேசன், பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வருபவர். அவரின் நடிப்பிற்கு ஈடு வேறு எவருமே இல்லை என்று புகழும் அளவுக்கு எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக ஏற்று நடிப்பவர் அவர். இது ஒரு பக்கம் இருக்க, சிவாஜி கணேசனுக்கு அசைவ உணவுகளில் அதிக ஈடுபாடு உண்டு என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அவருக்கு குயில் மாமிசம் மிகவும் பிடிக்குமாம். அதற்காகவே அவரது வீட்டில் பல குயில்களை மாமிசத்திற்காக வளர்த்து வந்தாராம். ஒரு நாள் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு வந்தாராம்.
லதா மங்கேஷ்கரும் சிவாஜி கணேசனும் உடன் பிறந்தவர்கள் போல் பழகி வந்தவர்கள். பம்பாய்க்குச் சென்றால் சிவாஜி கணேசன் லதா மங்கேஷ்கரின் வீட்டில் தங்குவாராம். லதா மங்கேஷ்கர் சென்னை வந்தால் சிவாஜி கணேசனின் வீட்டில் தங்குவாராம்.
அவ்வாறு ஒரு முறை லதா மங்கேஷ்கர் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு வந்தபோது, பல கூண்டுகளில் பல குயில்கள் அடைந்துகிடப்பதை பார்த்திருக்கிறார். “இது என்ன இவ்வளவு குயில்களை அடைத்து வைத்திருக்கிறீர்கள்?” என்று லதா மங்கேஷ்கர் கேட்க, அதற்கு சிவாஜி கணேசன், “எல்லாம் சாப்புடுறதுக்குதான்” என்று பதிலளித்தாராம்.
இதனை கேட்டதும் லதா மங்கேஷ்கருக்கு அழுகையே வந்துவிடுவது போல் இருந்ததாம். “தயவுசெய்து இந்த கூண்டுகளில் இருக்கும் குயில்களை பறக்கவிடுங்கள்” என்று லதா மங்கேஷ்கர் கேட்டுக்கொண்டாராம்.
அவர் அப்படி கேட்ட மறுநிமிடமே, அனைத்து கூண்டுகளிலும் உள்ள குயில்களை பறக்கவிட்டாராம் சிவாஜி கணேசன். அன்றில் இருந்து குயில் கறியை இனிமேல் சாப்பிடவே கூடாது என்று முடிவெடுத்தாராம் சிவாஜி கணேசன்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…