Connect with us

CINEMA

தனது 69-வது படத்திற்கு பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்.. ஷிஷியனை மிஞ்சுவாரா குரு..?

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் சக்சஸ் மீட், கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் விஜய், லியோ படத்தை கொண்டாடுவதை விட, தனது ரசிகர்களை தான் விழாவில் கொண்டாடிக்கொண்டு இருந்தார். ரசிகர்களுக்கான ஒரு நிகழ்ச்சியாகவே இது இருந்தது. தன் நடிப்பை விரும்பும் ரசிகர்களிடம் பேசுவது போல் இல்லாமல், கட்சி தொண்டர்களிடம் பேசுவது போன்றே விஜயின் பேச்சும் இந்த நிகழ்ச்சியில் அமைந்திருந்தது. அதனால், சினிமா விமர்சகர்கள் பலரும், இது லியோ வெற்றி விழா அல்ல, ரசிகர்களின் சந்திப்பு கூட்டம் என்றே கூறி வருகின்றனர்.

 Director Shankar

   

விஜய் தற்போது, தனது 68வது படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்து, பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க, விஜய் கடந்த 2ம் தேதியே புறப்பட்டுச் சென்று விட்டார். வரும் 2026ம் ஆண்டில் சட்டசைப தேர்லை எதிர்கொள்ளும் விதமாக, விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்லி ஆனந்த் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். மண்டலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், கிளைகள் என 234 தொகுதிகளிலும், ரசிகர்களை, கட்சி தொண்டர்களாக்கும் முயற்சிகளை செய்து வருகிறார்.

 Director Shankar

இதற்கிடையே, விஜய் 68க்கு பிறகு விஜய் 69 படத்தை முடித்த பிறகு நடிப்பில் ஒரு இடைவெளி விட விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவே என்று கூறப்படுகிறது. அதனால், தனது 69வது படத்தை இயக்குமாறு விஜய், இயக்குநர் ஷங்கரிடம் பேசி இருக்கிறார்.

முதல்வன் 2ம் பாகம் படம் போல, சட்டசபை தேர்தலுக்கு முந்தைய ஒரு முன்னோட்ட படமாக அது இருக்க வேண்டும். மக்கள் மத்தியில், அந்த படத்தின் செல்வாக்கு, அரசியலில் விஜய் நுழைவுக்கு பெரும் வாய்ப்பாக அந்த படம் அமைய வேண்டும் என்பதும் விஜயின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில், விஜய் 69, அரசியல் நிறைந்த ஷங்கரின் படமாக, விஜயை சிறந்த அரசியல்வாதியாக முன்நிறுத்தும் கதையாக உருவாக்க பிளான் செய்யப்பட்டு வருகிறது.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top