ஆடை அலங்கார அணிவகுப்பில் அமெரிக்கர்களை திரும்பி பார்க்க வைத்த இந்திய பெண்.. யார் இந்த மோனா பட்டேல்..?

By Mahalakshmi on மே 10, 2024

Spread the love

2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார் மோனா பட்டேல். மெட்ரோபாலின் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்ட்யூம் இன்ஸ்டிடியூஷன் என்ற நிறுவனத்திற்காக நிதி சேகரிக்க ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்ச்சி தான் மெட் காலா ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் முதல் வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

   

அந்த வகையில் இந்த வருடத்திற்கான மெட் காலா 2024 நியூயார்க்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல நாடுகள் சார்பாக பல பிரபலங்கள் வித்தியாசமான ஆடையில் கலந்து கொண்டு பலரின் கவனத்தை ஈர்த்திருந்தார்கள். இந்தியா சார்பாக இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ஆலியா பட் அணிந்திருந்த உடை அனைவரையும் கவர்ந்தது.

   

 

அவர் அணிந்திருந்த புடவை ஆனது 163 கைவினை கலைஞர்களால் 1965 மணி நேரம் உருவாக்கப்பட்டது. ரத்தின கற்களான மணிகள் மற்றும் கை எம்பிராய்டரிகள் செய்யப்பட்ட மலர்களை கொண்டு இந்த ஆடை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த உடையானது மெட் காலா நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து மற்றொரு பிரபலத்தின் ஆடையும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்ற ஆடை அலங்கார அணி வகுப்பில் மோனா பட்டேல் கலந்து கொண்டார். குஜராத் வதோதராவை சேர்ந்த மோனா பட்டேல் அமெரிக்காவின் நியூ ஜெர்சிக்கு படிக்க சென்றார். பல மில்லியன் டாலர் தொழில் சாம்ராஜ்யத்தை கட்டமைத்த இவர் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் ஆடை சார்ந்த இலாப நோக்கமற்ற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். முதன்முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோனா பட்டேலின் ஆடை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. வித்தியாசமாக ஒரு பறவை போல் காட்சியளித்தார் மோனா பட்டேல்.