ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி.. தன் 67-வது பிறந்த நாளை கொண்டாடிய 90’ஸ் நாயகன் மைக் மோகன்.. வைரல் புகைப்படங்கள்..!

By Mahalakshmi on மே 10, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்கவே முடியாத ஒரு பெயர் என்றால் மோகன். அதிலும் மைக் மோகன் என்றால் பலருக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் 90’ஸ் கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த இவர் பிறந்தது கர்நாடகா மாநிலம் உடுப்பியில், ஹோட்டல் முதலாளியின் மகனான இவர் மேடை நாடகங்களில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.

   

கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என பல ஹீரோக்கள் முன்னணி ஹீரோக்களாக வளம் வந்து கொண்டிருந்த போது எதார்த்தமாக சினிமாவில் நுழைந்தவர் தான் மோகன். கமல் லீட் ரோலில் நடித்த கோகிலா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மோகன் அதைத் தொடர்ந்து பல படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கின்றார்.

   

 

அதிலும் முக்கியமாக பாடகர் கதாபாத்திரத்தில் இவர் நடித்து அசத்தி இருக்கின்றார். எத்தனையோ பேர் விதவிதமான பாடகர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மைக் மோகன் தான் பாட்டு எப்போதும் பொருந்தியிருப்பார். இசைஞானி இளையராஜா இவரின் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார். இவர்களின் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் கட்டாயம் வெள்ளிவிழா கண்டுவிடும் என்பதால் தான் வெள்ளி விழா நாயகன் என்று செல்ல பெயர் உடன் அழைக்கப்பட்டார்.

கோபுரங்கள் சாய்வதில்லை, பிள்ளை நிலா, உதயகீதம், கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை,  இதய கோவில், மெல்லத் திறந்தது கதவு, மௌன ராகம் போன்ற படங்கள் அதிரிபுதிரி ஹிட் கொடுத்த திரைப்படங்கள். சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த மைக் மோகன் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த காரணத்தினால் சரிவை சந்தித்தார். பின்னர் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் மீண்டும் நடித்து வருகிறார்.

விஜய் நடிப்பில் உருவாகும் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இன்று அவரது 67 வது பிறந்தநாள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் நீர் மோர் வழங்கி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.