Connect with us

CINEMA

2 பேரும் ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சவங்க இல்ல.. ஆண்டவர் & அட்மன் பார்த்த வேலை.. ஆட்டம் கண்டுபோன தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுக்கு ரெட் கார்ட் கொடுப்பது வழக்கம் தான். அதாவது நடிகர்கள் தாங்கள் கமிட் செய்த படங்களை ஒழுங்காக முடித்துக் கொடுக்காமல் இருந்தால் அப்படத்தின் இயக்குனர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ நடிகர் சங்கத்திடம் சென்று புகார் கொடுப்பார்கள். அவர்கள் தீவிர விசாரணை செய்து அந்த நடிகர்கள் மீது தவறு இருந்தால் ரெட் கார்ட் கொடுப்பார்கள். இது தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு வழக்கம்தான்.

   

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லிங்குசாமி இவர் தனது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் கமலஹாசன் நடிப்பில் உருவான உத்தம வில்லன் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. முக்கியமாக படம் வணிக ரீதியாக சரியான அடி வாங்கியது.

இதனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மீள முடியாத நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. அந்த வருத்தத்தை பல பேட்டிகளில் லிங்குசாமி பகிர்ந்து இருப்பார். அது மட்டும் இல்லாமல் சில வாரங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் லிங்குசாமி. அதில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் செய்து கொடுப்பதாக கமலஹாசன் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் சொன்னபடி படம் நடித்து தரவில்லை என்று கூறியிருந்தார் இது தொடர்பாக லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் இந்த புகாரில் உத்தம வில்லன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது .புதிய படத்தில் 30 கோடி பட்ஜெட்டில் நடித்து தருவதாக கமலஹாசன் உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் இன்னும் நடித்துக் கொடுக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க நடிகர் சிம்பு மீது வேல்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் அவர்கள் ஒரு புகார் ஒன்றை கொடுத்து இருக்கின்றார். அதாவது சிம்பு நடித்த மாநகரம் திரைப்படத்தை தயாரித்தது வேல்ஸ் நிறுவனம் தான்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு கொரோனா குமாரு என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். ஒப்புக்கொண்டபடி கொரனா குமார் படத்தை சிம்பு முடித்துக் கொடுக்கவில்லை. இந்த படத்தை முடித்துக் கொடுக்காத சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. இப்படி இருக்க கமல் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக்லைப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இதை பார்த்த பலரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை என்று கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top