Connect with us

CINEMA

இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என்று தெரிகிறதா..?

தமிழ் திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு , இசையமைப்பாளர் கங்கை அமரனனின் மகன் ஆவார். சென்னை 600028  திரைப்படத்தின் மூலம்  இயக்குனரான வெங்கட் பிரபு  மக்கள் கவனத்தை ஈர்த்தார். இந்த படத்தைத் தொடர்ந்து பல படங்களை இயக்கி  வணிக வெற்றிகளைப் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68 படத்தை இயக்கினார்.

   

வெங்கட் பிரபு இயக்கத்தில் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இளையதளபதி நடிகர் விஜயின் 68 ஆவது படம் THE GREATEST OF ALL TIME.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்களின் கவனத்தை பெரிதும்  ஈர்த்தது வருகிறது. THE GREATEST OF ALL TIME படத்தில் நடிகர் விஜய் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஒன்று வயதான வேடம் மற்றொன்று  இளம் விஜயாக நடித்துள்ளார்.  இதுவரை கண்டிராத நடிகர் விஜய் அவர்களை காண ரசிக பெருமக்கள் ஆர்வத்துடன் இந்த படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது இணையதள பக்கத்தில் MGR உடன் இருந்த சிறுவயது  புகைப்படத்தை முன்பே பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நினைவுகளை ஏற்படுத்தும் இந்த புகைப்படத்தினை தன்னுடைய X தளத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள்.

#image_title

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top