Categories: சினிமா

நான் கேட்டும் அதை செய்ய மறுத்தார் விஜய்… பல வருடம் கழித்து சீக்ரெட்டைப் பகிர்ந்த பிரபலம்!

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக வரும் வருகிறார். அவர் தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நுழைந்தார். அதன்பிறகு அவர் இயக்கிய ஹவுஸ்ஃபுல், இவன், உள்ளே வெளியே போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

புதிய பாதை படத்தில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த சீதாவைக் கதாநாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தின் உருவாக்கத்தின் போது இருவரும் காதலில் விழுந்தனர். அதன் பிறகு அவரை திருமணம் செய்துகொண்ட பார்த்திபன் 12 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்தார்.

பார்த்திபன் தன்னுடைய சினிமா பயணத்தில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார் பார்த்திப்ன. நடிகராக சம்பாதிக்கும் பணத்தை இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் முதலீடு செய்து வித்தியாசமான படங்களை இயக்கி கையை சுட்டுக் கொள்கிறார். ஆனாலும் தொடர்ந்து வித்தியாசமானப் படங்களாகக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

பார்த்திபன் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சக நடிகர்களோடு நடந்த சில சம்பவங்களை அவ்வப் போது பகிர்ந்து வருகிறார். அப்படி விஜய்யுடன் ஏற்பட்ட ஒரு சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் விஜய்யோடு சேர்ந்து படம் நடிக்கவில்லை. அவரை வைத்து படமும் இயக்கவில்லை. இனிமேல் இயக்கப் போவதுமில்லை. ஏனென்றால் அவரே தனது கடைசிப் படத்தை அறிவித்துவிட்டார்.

அவர் என் கவிதைகள் வேண்டும் என்று சொன்னதால் நான் அழகிய தமிழ் மகன் படத்தில் எழுதிக் கொடுத்தேன். ஒரே ஒருமுறை மட்டும் நான் ஏதோ டிரைலரோ, பாடலோ ரிலீஸ் செய்து தரும்படி கேட்டபோது ‘சாரி சார். நான் அதுபோல எல்லாம் செய்வதில்லை என்று உங்களுக்கேத் தெரியும். ஒருத்தருக்குப் பண்ணினால் எல்லோருக்கும் பண்ணவேண்டும்.” என்று மறுத்தார். அதை நான் புரிந்துகொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

2 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

2 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

2 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

2 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

2 மணத்தியாலங்கள் ago