காதல் தண்டபாணியை ஒரு குணச்சித்திர நடிகராக நம்மில் பல பேருக்கு தெரியும். அடிக்க வருவதற்கு முன்பு திண்டுக்கல்லில் தனக்குத் தெரிந்த பல தொழில்களை செய்து வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் இவர் பொரிகடலை கடை கூட வைத்து நடத்தி வந்துள்ளார். நடிப்பின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தை கண்ட இயக்குனர் பாலாஜி சக்திவேல், தன்னுடைய காதல் திரைப்படத்தில் கதாநாயகி சந்தியாவின் அப்பாவாக நடிக்க தண்டபாணிக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்.
முன் அனுபவமே இல்லாத தண்டபாணி அந்த திரைப்படத்தில் தன்னுடைய அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வென்றார். அதுவே பின் நாட்களில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்க ஒரு காரணமாகவும் அமைந்தது. சிறுவயதிலிருந்தே இவருக்கு இருந்த அம்மை தழும்புகளால் ஒரு நெருடல் ஆகவே வாழ்ந்து வந்தாராம். ஆனால் அதுவே பின் நாட்களில் இவருடைய அடையாளமாக மாற தனித்துவமான குரலாலும் உடல் தோற்றத்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்றார் காதல் தண்டபாணி.
சத்யராஜின் இங்கிலீஷ்காரன் , மிஸ்கினின் சித்திரம் பேசுதடி , ஜெயம் ரவியின் உனக்கும் எனக்கும் , விஜய்யின் வேலாயுதம் , ராகவா லாரன்ஸின் முனி , ஆர்யாவின் வட்டாரம் , சிவகார்த்திகேயனின் வருடபடாத வாலிபர் சங்கம் ஆகியவை தண்டபாணியின் படங்களில் அடங்கும் . தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வந்த தண்டபாணி இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த காதல் தண்டபாணி கடந்த 2021 ஆம் ஆண்டு திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…