தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்தாலும் அதற்கான படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கவில்லை.
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்க மறுத்த சம்பவம் ஒன்றை தனுஷ் முன்னதாக கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய பொல்லாதவன் திரைப்படம் மூலமாக வெற்றிமாறனை இயக்குனராக அறிமுகம் செய்தார் தனுஷ். அந்தத் திரைப்படம் தொடங்கும் போது இரண்டு படங்கள் எடுக்கலாம் முதல் படம் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது படத்தை அது பாதிக்காது என்று பேசி தான் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் நெடுஞ்சாலை திரைப்படத்தை தொடங்கி அந்த கதையை கைவிட்டு அதன் பிறகு உருவான திரைப்படம் தான் பொல்லாதவன். தனுஷின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது.
காரணம் அவரது நடிப்பில் முதிர்ச்சியை தெரிந்தது அந்த படத்தில் இருந்து தான். அதன் பிறகு ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற வெற்றி திரைப்படங்களில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி பயணம் செய்தது. இயக்கம் மற்றும் நடிப்பு என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இருவரும் சேர்ந்து காக்கா முட்டை மற்றும் விசாரணை உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்தனர். இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக விளங்குபவர் வெற்றிமாறன் தான் என்று தயாரிப்பாளர் தானும் கூறியுள்ளார். பொல்லாதவன் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் வடசென்னை திரைப்படத்தை நடிகர் சிம்புவை வைத்து இயக்கப் போவதாக தனுஷ் இடம் கூறியிருந்தார்.
அந்த காலகட்டத்தில் நடிகர் சிம்புவுடன் பல நிகழ்ச்சிகளில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். வடசென்னை படத்தில் இருக்கும் ராஜன் கதாபாத்திரத்திற்கு முதலில் குமார் என்ற பெயர்தான் இருந்துள்ளது. சுமார் 30 நிமிடங்கள் வரக்கூடிய அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று தனுஷிடம் வெற்றிமாறன் கேட்டுள்ளார். அதற்கு உடனே தனுஷ் எனக்கு பெருந்தன்மை இருக்கு சார், ஆனா அவ்வளவு பெரிய பெருந்தன்மை எல்லாம் கிடையாது, நானும் ஒரு சாதாரண மனுஷன் தான் என்று பதில் கூறி வடசென்னையில் நடிக்க தனுஷ் மறுத்துவிட்டாராம். இந்த தகவலை தனுஷ் ஒரு பேட்டியில் அவரே கூறியுள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…