65 கோடியில் ஆரம்பிச்சு இங்க வந்து நிப்பாட்டிடீங்களே.. ப்ரொடியூசருக்கு ஆப்பு வச்ச விக்கி.. முதலுக்கே மோசம் பண்ண பிரதீப் ரங்கநாதன்..!

Spread the love

கோமாளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். கவிமோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து பிரதீப் ரங்க நாதன் இயக்கி அவரே ஹிரோவாக நடித்திருந்த திரைப்படம் தான் லவ் டுடே. செல்போனை வைத்துக் கொண்டு இப்போதுள்ள இளைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இந்த படம் போட்டுக் காட்டி இருந்தது. இந்தப் படமும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இனி மேல் தான் இயக்கும் படங்களில் தானே ஹீரோ என்று பிரதீப் முடிவு எடுத்தார்.

லவ் டுடே திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கூட இவரை தேடி வந்த நிலையில் அதனை இயற்கை இவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐ கே என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். இந்தத் திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் லியோ போன்ற படங்களை தயாரித்தல் லலித்குமார் தயாரித்தார். அதேபோல அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படத்திலும் பிரதீப் நடித்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பக்கமாக எல்.ஐ.கே திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் முடிந்த பாடு இல்லை.

அதோடு டியூட் என்ற படத்தில் பிரதீப் நடிக்க தொடங்கிவிட்டார். பட்ஜெட்டை விட விக்னேஷ் சிவன் அதிக செலவு செய்ததால் கடுப்பான லலித் குமார் இதற்கு மேல் என்னால் பணம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட விக்னேஷ் சிவன் படத்தை கிடப்பில் போட்டார். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடந்து படபிடிப்பு மீண்டும் தொடங்கியது. இந்த படம் தொடங்கிய போது சொல்லப்பட்ட பட்ஜெட் என்னவோ 65 கோடி தான். அதன் பிறகு 70 கோடியானது. இந்தப் படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ள நிலையில் படம் தொடங்கப்பட்ட நாள் முதல் ரிலீஸ் தேதி வரை கணக்கிட்டால் இரண்டு வருடங்கள் ஆகிறது. 70 கோடிக்கான வட்டி மற்றும் வெளியீட்டு செலவு என எல்லாம் சேர்த்தால் படத்தின் மொத்த பட்ஜெட் 125 கோடியை தொடுகிறது. ஆனால் பிரதீப் ரங்க நாதனுக்கு அவ்வளவு வியாபாரம் எல்லாம் இல்லை. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தயாரிப்பாளர் லலித் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம்.

Nanthini

Recent Posts

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

20 minutes ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

22 minutes ago

“வெறும் ரூ100-க்காக இப்படியா…?!” கணவன் தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49). இவருக்கும் இவரது மனைவி பிரியங்காவிற்கும்…

31 minutes ago

பிரேசிலை வீழ்த்திய ஆவேசம்… ஆடை இல்லாமல் இருந்த ஹாலாந்தை கட்டிப்பிடித்த நார்வே இளவரசி… உடைமாற்றும் அறையில் பரபரப்பு…!

2026 ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று-16 போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற…

32 minutes ago

“என் மகளுக்கு சுதந்திரம் தான் முக்கியம்…!” கல்யாண மேடையில் மணமகனின் அராஜகம்… திருமணத்தையே நிறுத்திய மாஸ் தந்தை…!”

ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…

38 minutes ago