“சீனாவிலும் நம்ம ஊர் லோக்கல் ட்ரெயின் நிலைமைதான்” இந்தியப் பயணி வெளியிட்ட சீக்ரெட் வீடியோ.. நெட்டிசன்களை உலுக்கிய ‘சீனாவின் நிஜ முகம்..!!

Spread the love

உலகிற்குத் தனது அதிவேக புல்லட் ரயில்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளைக் காட்டி பெருமை பேசும் சீனாவின் மாற்றுப் பக்கத்தை இந்தியப் பயணி ஒருவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். சஞ்சன் குமார் என்ற இந்திய யூடியூபர் மற்றும் பயணி, சீனாவின் உள்ளூர் ரயில் ஒன்றின் பொதுப் பெட்டியில் (General Coach) பயணம் செய்தபோது எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக நாடுகளுக்குத் தன் நாட்டின் பிரம்மாண்ட வளர்ச்சியை மட்டுமே காட்டும் சீனாவின் உண்மையான தரைமட்ட யதார்த்தத்தை இந்த வீடியோ உடைத்துக் காட்டியுள்ளது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ரயிலின் பொதுப் பெட்டி பயணிகளால் கூட்ட நெரிசலுடன் அண்டி வழிகிறது. காலியாக ஒரு இருக்கை கூட இல்லாததால், ஏராளமான மக்கள் நீண்ட தூரம் நின்றுகொண்டே பயணம் செய்கின்றனர். இன்னும் சிலர் ரயிலின் தரைப்பகுதியிலும், கழிவறைக்கு அருகிலும் அமர்ந்து கொண்டு மிகவும் சிரமப்பட்டு பயணிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், குறிப்பாக இந்தியர்கள், “இது அச்சு அசலாக நமது இந்திய ரயில்களின் பொதுப் பெட்டியைப் போலவே இருக்கிறது” என்று கமெண்ட் செய்து சீன ரயில்வேயின் நிலையை ஒப்பிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/reel/DZ1RejCzPTL/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

சீனாவில் மணிக்கு 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில் நெட்வொர்க் இருந்தபோதிலும், ஏன் இத்தகைய சாதாரண ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பதற்கான காரணத்தையும் இந்த செய்தி விளக்குகிறது. சீனாவில் உள்ள ஏழை தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் சாதாரண மக்கள் புல்லட் ரயில்களின் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த முடியாமல், இந்த சாதாரண ரயில்களையே நம்பியுள்ளனர். வெளிப்பகட்டுக்கு சீனாவின் பளபளப்பான நகரங்கள் தெரிந்தாலும், அங்கேயும் சாமானிய மக்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் புதிய விவாதமாக மாற்றியுள்ளது.

Soundarya

Recent Posts

NDA-வில் இருந்து பாமக விலகலா?… அன்புமணி முடிவால் அதிர்ச்சியில் அதிமுக…!!

அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…

5 minutes ago

CM விஜய்க்கு பறந்த அவசர அப்டேட்… ICU-வில் VS பாபு… நேரில் செல்கிறாரா முதல்வர்?…

ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

11 minutes ago

அமைச்சர்களின் பதவி பறிப்பு…. லண்டனில் இருந்து திரும்பிய CM விஜய்… முதல் அதிரடி வேட்டை ஸ்டார்ட்…!

விஜய் தனது லண்டன் பயணத்தை முடித்துவிட்டு காலை 8 மணிக்கு சென்னை திரும்புவதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி பெற்ற கழகம்…

16 minutes ago

அய்யய்யோ… என்ன கொடுமை இது…. மகளின் சாதி மறுப்புத் திருமணம்…. உயிருடன் இருக்கும் போது… பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த தந்தை… அதிர்ச்சியில் கிராமம்…!

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தையே இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சிச் சம்பவம்…

52 minutes ago

அட கடவுளே… எங்கள் ஹூக்கா பார் பத்தி செய்தி போடுறியாடா?… பத்திரிகையாளர் மீது நடந்த கொடூரத் தாக்குதல்… லக்னோவில் பரபரப்பு…!

லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'மெராஜ் கஃபே' உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான…

1 மணத்தியாலம் ago