தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் தனது சினிமா கேரியரின் உச்சத்தில் இருக்கிறார் என்றும் அவரின் தோல்விப் படங்கள் மிகச்சிறப்பாக கலெக்ஷன் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்படி அவர் நடிப்பில் மோசமான விமர்சனங்களைப் பெற்ற வாரிசு படமே 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக அப்போது புள்ளி விவரங்கள் வெளியாகின. ஆனால் இவையாவும் ஊதிப் பெருக்கப்பட்டவை என அப்போதே விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் “வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாரிசு படத்தின் வசூல் 120 கோடி ரூபாய்தான் என்றும் விஜய்யின் சம்பளம் 40 கோடி ரூபாய்தான்” என்றும் தில் ராஜு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படம் ரிலீஸான போது 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எது உண்மை என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…