தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.
ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் எந்த மார்க்கெட்டும் இல்லாமல் தனது இடத்துக்காகப் போராடி வருகிறார்.
ஸ்ரீகாந்தின் மேனேஜராக இருந்தவர் தற்போது இணையத்தில் பிரபலமாக இருக்கும் வலைப்பேச்சு அந்தணன். அவர் ஸ்ரீகாந்தை வைத்து ‘கிழக்குக் கடற்கரை சாலை ‘ என்ற படத்தை எடுத்துக் கையை சுட்டுக்கொண்டார். அதனால் கடன் காரனாகி அதில் இருந்து மீண்டு வந்தக் கதையை ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அதில் “நான் அந்த படத்தை எடுப்பதற்குள் படாத பாடு பட்டேன். எடுத்த பின்னர் அதை ரிலீஸ் செய்ய பட்ட கஷ்டம் அதைவிட அதிகம். மதுரை ஏரியாவை நான் ஒரு விநியோகஸ்தரிடம் 18 லட்ச ரூபாய்க்கு பேசியிருந்தேன். அப்போது ஸ்ரீகாந்த் வந்து மதுரை ஏரியாவை ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கிக் கொள்வதாக சொல்கிறார் என்றார். எனக்கு அப்போதே அவர் மேல் சந்தேகம். ஏனென்றால் அவர் இப்படிதான் படத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி கடைசி நேரத்தில் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்.
ஆனால் ஸ்ரீகாந்தை அறிமுகப் படுத்திய தயாரிப்பாளர் என்பதால் அவர் என்னிடம் வற்புறுத்தினார். எனக்கும் வேறு வழியில்லை. அவரை போய்ப் பார்த்தேன். அவர் ரெண்டு நாள் மூனு நாள் என இழுத்தடித்து கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்ற சொன்னார். அப்படி செய்தால் மற்ற விநியோகஸ்தர்கள் எல்லாம் பணத்தைக் குறைத்து விடுவார்கள் என்றேன், அப்படியென்றால் எனக்குப் படம் வேண்டாம் என கடைசி நேரத்தில் சொல்லிவிட்டார். இதனால் நான் மதுரை ஏரியாவை வெறும் ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. எனக்கு மிகப்பெரிய நஷ்டம்” எனக் கூறியுள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…