தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் வி.சேகர். விசுவை போலவே குடும்ப பாங்கான நடுத்தர குடும்பங்களை மையமாகக் கொண்டு படம் எடுப்பதில் வல்லவர். 1990 காலகட்டத்தின் இறுதியிலும் 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இவருடைய இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்தவை. ஒவ்வொரு படமும் அவ்வளவு அருமையான கதை அம்சத்துடன் கூடியவை. குடும்பங்களின் பிரச்சனைகளை அலசும் இவருடைய ஸ்டைல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்து பிரச்சினைகளை அவ்வளவு அழகாகவும் இயல்பாகவும் தன்னுடைய படங்களில் காட்டியிருப்பார். கூட்டுக் குடும்பங்களின் அழகை முக்கியத்துவத்தை அழகாக எடுத்துரைப்பார்.
இவர் இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, பொறந்த வீடா புகுந்த வீடா என ஏராளமான திரைப்படங்கள் நல்ல குடும்ப கதையை மையமாகக் கொண்டு வெளியாகி இருந்தன. இன்றும் இவருடைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய படங்களில் பொதுவாகவே நடிகர்களை விட நடிகைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். முதலில் சிலுக்கு, இரண்டாவது சரண்யா என அடுத்தடுத்து ராதிகா, குஷ்பூ மற்றும் பானுப்பிரியா என அடுத்தடுத்து ஏராளமான நடிகைகள் தொடர்ந்து என் படங்களில் நடித்துள்ளனர்.
விஜயகாந்த் சார் என்னோட சூட்டிங் ஸ்பாட் வரும் போது நடிகர் சங்கம் மீட்டிங் போட வேண்டுமென்றால் எங்கேயும் போட வேண்டாம் உங்க சூட்டிங் ஸ்பாட்டில் போட்டுட்டாலே போதும் என்று சொல்லுவார். ஏனென்றால் சுமார் 20 பேருக்கு மேல் அங்கேயே இருப்பார்கள். எப்போதுமே பெண்களுக்கு என் படங்களில் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
ஒரு கட்டத்தில் லேடிஸ் ஆடியன்ஸ் அதிகமாயிட்டாங்க. ஹீரோ போயிட்டா கூட அடுத்ததாக வேற யாரையாவது பேசி கூட்டிட்டு வந்துடலாம் ஆனால் நடிகைகள் போய்ட்டாங்கன்னா திரும்ப கூட்டிட்டு வரது ரொம்ப கஷ்டம் என்பதற்காக ஒரு கட்டத்தில் பெண்கள் மட்டும் தான் என்று போர்டு போட்டுட்டேன். அப்போது தான் காலம் மாறி போச்சு படத்தின் ஷுட்டிங் நடந்தது. இதனால் ஒரு கட்டத்தில் லேடிஸ் டைரக்டர் என்ற ஒரு இமேஜ் வந்துச்சு. பெண்கள் ஆடியன்ஸ் அதிகமாகிவிட்டதால் ஒரு கட்டத்தில் என்னால் வேறு படங்களை எடுக்க முடியவில்லை பெண்களை சார்ந்த படங்களை தான் அதிகமாக எடுத்தேன் என்று வி.சேகர் பேசியுள்ளார்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…