Connect with us

CINEMA

டயலாக்கை மாற்றிச் சொன்ன வடிவேலு, ‘பளார்’ என அறை விட்ட கேப்டன் – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தரமான சம்பவம் இதுதானா?

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் கேப்டன் என அழைக்கப்படுகிறார். சின்ன கவுண்டர், தவசி போன்ற படங்களை போலவே, தமிழ் சினிமாவில் விஜய்காந்த் வார்த்தைக்கு என தனி மரியாதை, அவருக்கென்ற தனி மரியாதை உண்டு. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சங்கம் வளர்ச்சி நிதிக்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது/. இந்த விழாவை அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்து நடத்தியது கேப்டன் விஜயகாந்த் தான். அப்போது ரஜினி, கமலை அதில் கலந்துக்கொள்ள விஜயகாந்த் அழைப்பு விடுத்தபோது, ஒரு வார்த்தை கூட மறுக்காமல், உடனே ஒத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருவரும் கலந்துக்கொண்டனர்.

 actor Vijayakanth

   

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறுகையில்,தமிழ் சினிமா துறையில் உள்ள பெரிய நடிகர்களே விஜயகாந்தை மறுத்து பேசாத போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை எதிர்த்து பேசி, அறை வாங்கியவர்தான் விஜயகாந்த். விஜயகாந்த் படங்களில் எஸ்எஸ் சந்திரன் தான் காமெடி காட்சிகளில் நடிப்பார். ஆனால், திமுக ஆதரவாளரான அவர், அடிக்கடி திமுகவை புகழ்ந்து, புகழ்ந்து விஜயகாந்த் படங்களில் பேசுவார். அதை விரும்பாத விஜயகாந்த், வடிவேலுவை தனது படங்களில் நடிக்க அனுமதித்தார். ஒரு படத்தில், ஒரு காட்சியில் நடித்த போது இயக்குநர் சொன்ன வசனத்தை பேசாமல், வேறு வசனத்தை பேசி நடித்தார் வடிவேலு. இதுகுறித்து இயக்குநரும், விஜயகாந்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

 actor Vijayakanth

வசனம் சரியில்லை, பிடிக்கவில்லை என்றால் இயக்குநரிடம் சொல்ல வேண்டும். படத்தின் கதை, அதற்கேற்ப அந்த வசனங்கள் இருக்கும். அதனால் நாமே வசனத்தை முடிவு செய்து பேசக் கூடாது என விஜயகாந்த் அறிவுரை சொன்ன பிறகும், ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு அதே போல் பேசியதால், கோபப்பட்ட விஜயகாந்த், ஓங்கி ஒரு அறை விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேலு அந்த படத்துக்கு பிறகு விஜயகாந்த் படங்கள் என்றாலே, அரண்டு போய் விடுவாராம். வடிவேலுவின் திறமையை விட அவரது அதிகமான அகங்காரம், திமிர், தலைக்கனம்தான் அவரது வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்,

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top