டெல்லியின் ஜங்புரா பகுதியில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி ஒருவர், சனிக்கிழமை காலை அவரது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், அந்த மூதாட்டி 1985 முதல் அப்பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். சனிக்கிழமை காலை தாயைப் பார்க்க வந்த மகள், வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மூதாட்டியின் கைகள் கட்டப்பட்ட நிலையிலும், முகத்தில் காயங்களுடனும் இருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்த நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும், அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து தங்களைத் தடுத்துவிடக் கூடாது என்பதற்காகக் கொலையாளிகள் அருகில் உள்ள வீடுகளின் கதவுகளை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு இக்கொடூரத்தைச் செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தனியாக வாழும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.
மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த…
கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…
ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…
தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…
உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான…
அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…