பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஜோர்லான் ஆல்வெஸ் டா சில்வா (33) என்ற பயங்கர குற்றவாளியை போலீசார் ஒருவழியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பல நாட்களாக காவல்துறையின் கண்ணில் மண்ணை தூவி தப்பித்து வந்த இவனை பிடிக்க போலீசார் தீவிரமாக களம் இறங்கிய நிலையில், அடர்ந்த காடுகளின் புவியியல் அமைப்பு அவனுக்கு சாதகமாக இருந்ததால் தப்பிப்பது சுலபமாக இருந்தது. ஆனால், காவல்துறையின் தொடர் நடவடிக்கையால் இறுதியில் அவன் பிடிபட்டான்.
அவனை கைது செய்ய அருகில் சென்ற காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கோடுகள் போட்ட நீண்ட கவுன், நீளமான தலைமுடி, பெண்கள் பயன்படுத்தும் செருப்பு, கறுப்பு கண்ணாடி மற்றும் நெயில் பாலிஷுடன் ஒரு பெண் வடிவில் அவன் காட்சியளித்தான். மேலும், அவனது கையில் 2 வயது குழந்தையும் இருந்தது. ஆரம்பத்தில் திகைத்த போலீசார், அவனது மேலாடை சற்று விலகியபோது உள்ளே அணிந்திருந்த ஆண்களுக்கான சட்டையைக் கண்டு அவன் பெண் வேடமிட்ட ஆண் என்பதை உறுதி செய்தனர்.
யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்கவே பெண் வேடமிட்டு, ஒரு குழந்தையையும் தூக்கிக்கொண்டு தப்பியதாக விசாரணையில் அவன் ஒப்புக்கொண்டான். அந்த குழந்தை உடனடியாக பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அது எப்படி அவனிடம் வந்தது என்பது குறித்து தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த ஜோர்லான், வெறும் 3 மாதங்களில் 16 பேரைக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததே காவல்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், விசாரணையின் அடுத்தகட்டமாக அவன் கூறியத் தகவல் பிரேசில் தேசத்தையே உலுக்கியுள்ளது. தான் 13 வயதிலேயே முதல் கொலையைச் செய்ததாகவும், இதுவரை தனது வாழ்நாளில் மொத்தம் 80 பேரைக் கொன்றிருப்பதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். இத்தனை பெரிய எண்ணிக்கையிலான கொலைகள் உண்மையா அல்லது அவன் திசைதிருப்ப முயல்கிறானா என்பதை அறிய, முடிக்கப்படாமல் உள்ள பழைய கொலை வழக்குகளின் கோப்புகளை தூசு தட்டி போலீசார் மீண்டும் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
குற்றவாளி தப்பிப்பதற்காக ஒரு அப்பாவி குழந்தையை கேடயமாகப் பயன்படுத்தியது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 80 கொலைகள் என்ற அவனது அதிர்ச்சி வாக்குமூலம் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த உண்மைகள் அனைத்தும் முழுமையான போலீஸ் விசாரணைக்குப் பிறகே அதிகாரப்பூர்வமாக வெளிவரும்.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…