உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால்… அதைப்பற்றி பலர் அறியாத ஆச்சர்யமூட்டும் தகவல்கள்…

Spread the love

தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றும் இந்தியாவில் உள்ள நினைவு சின்னங்களில் முக்கியமானதாகும். இது டெல்லி ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாகவும் உலக புகழ்பெற்றிருக்கிறது. இந்த தாஜ்மஹால் முகலாய மன்னர் ஷாஜகான் தனது இறந்து போன காதல் மனைவியான மும்தாஜ் நினைவாக 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த தாஜ்மஹால் பற்றி பலரும் அறியாத ஆச்சரியமான தகவல்களை இனி பார்ப்போம்.

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் அற்புதங்களில் ஒன்றாக தாஜ்மஹால் இருக்கிறது. மனிதன் படைத்ததில் பிரம்மாண்டமாக திகழ்கிறது தாஜ்மஹால். இஸ்லாம், பாரசீகம் மற்றும் இந்திய கட்டிடக்கலையின் கலவையில் உருவாகி இருக்கிறது தாஜ்மஹால். இந்த தாஜ்மஹாலை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 20000 தொழிலாளர்கள் இந்த தாஜ்மஹாலை கட்ட பணியாற்றி இருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.

ஷாஜகான் தனது அன்புக்குரிய மனைவி மும்தாஜூக்காக தாஜ்மஹால் கட்டியிருக்கிறார். வரலாற்றுப்படி ஷாஜகானின் மூன்றாவது மனைவி தான் மும்தாஜ். அவரது இயற்பெயர் அர்ஜுமன்த் பானு பேகம் என்பதாகும். ஷாஜகானின் 14 வது குழந்தையை பெற்றெடுக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் மும்தாஜ் இறந்து போயிருக்கிறார்.

20000 தொழிலாளர்கள் மட்டுமல்ல ஆயிரம் யானைகளை வைத்து தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த பளிங்கு கற்களை ஏந்திக்கொண்டு யமுனை ஆற்றங்கரையில் இறக்குவது தான் யானைகளின் பணியாக இருந்திருக்கிறது. பளிங்கு கற்களை வைத்து தாஜ்மஹால் கட்டப்பட்டாலும் அலங்கார வடிவமைப்பிற்காக விலைமதிப்பற்ற கற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை, நண்பகல், இரவு என எந்த கால நிலையிலும் தாஜ்மஹால் பல வண்ணங்களில் மின்னும் தன்மை கொண்டதாக இருக்கிறது. தாஜ்மஹாலின் உள்ளுக்குள்ளே இஸ்லாம் மக்களின் புனித நூலான குரானின் வசனங்கள் பல இடங்களில் எழுதப்பட்டிருக்கும்.

தாஜ்மஹாலுக்கு மும்தாஜ் மஹால் என்றும் ஒரு பெயர் உள்ளது. இங்குள்ள மும்தாஜ் கல்லறையில் அல்லாஹ்வின் 99 பெயர்கள் சித்திர கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலை கட்டுவதற்கான கட்டிட பொருட்கள் பஞ்சாப், ராஜஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, சீனா, திபெத், அரேபியா என பல்வேறு நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

வெள்ளை பளிங்கு கற்களால் ஆன தாஜ்மஹாலை போலவே ஷாஜகான் கருப்பு பளிங்கு கற்களை வைத்து மற்றொரு தாஜ்மஹாலை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் போர் அதிகரித்ததன் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டு இருக்கிறார். கட்டிடக்கலையில் மட்டும் தாஜ் மஹால் அதிசயம் அல்ல அது வெளிச்சத்துக்கு தகுந்த மாதிரி தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு டையில் கட்டி முடிக்கப்பட்டு இன்றளவும் அசையா ஆச்சரியமாக நின்று கொண்டிருக்கிறது. இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் ஷாஜகான் யாருக்காக ஆசையாய் தாஜ்மஹால் கட்டினாரோ அந்த மும்தாஜே இந்த கட்டிடத்தை பார்க்கவில்லை. அவர் இறந்த பிறகு தான் ஷாஜகான் தாஜ்மஹாலை காட்டியிருக்கிறார்.

admin

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

5 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

6 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

6 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

6 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

6 மணத்தியாலங்கள் ago